கடை திறப்பு விழாவில் இப்படி நடக்கும் என்று ஸ்ரீதிவ்யா எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்

By Siva

Recommended Video

கடை திறப்பு விழாவில் ஸ்ரீதிவ்யா-வீடியோ

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் துணிக் கடையை திறந்து வைக்க வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவுக்காக சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்தில் நடித்ததில் இருந்து அவரை அனைவரும் ஊதா கலரு ரிப்பன் என்று செல்லமாக அழைத்தனர்.

மெதுவாக வளர்ந்து அவரின் மார்க்கெட் தற்போது படுத்துவிட்டது.

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பட்டுப் புடவை கடை திறப்பு விழாவில் ஸ்ரீதிவ்யா கலந்து கொண்டார். ரிப்பன் வெட்டி அவர் கடையை திறந்து வைத்தார்.

போக்குவரத்து

போக்குவரத்து

ஸ்ரீதிவ்யாவின் வருகைக்காக சாலை அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையம், காந்தி சாலை, நெல்லுக்கார தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோபம்

கோபம்

ஒரு நடிகை வருவதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா. வெயிலில் நாங்கள் அல்லல்படுகிறோம் என்று வாகன ஓட்டிகள் கடுப்பில் திட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.

கூட்டம்

கூட்டம்

வழக்கமாக நடிகைகள் கடையை திறந்து வைக்க வந்தால் அவர்களை பார்க்க கூடும் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடை திறக்க வந்த இடத்தில் இப்படி நடக்கும் என்று ஸ்ரீதிவ்யா எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X