வந்தனாவை வெளியேற்றுக:ஸ்ரீகாந்த் மீண்டும் புகார்!

By Staff

சென்னை:தங்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள வந்தனாவை வெளியேற்றக் கோரி காவல்துறை ஆணையரிடம் நடிகர் ஸ்ரீகாந்த்தின் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் ரகசியத் திருமணம் செய்து கொண்ட வந்தனா சமீபத்தில் ஸ்ரீகாந்த்தின் வீட்டில் அதிரடியாக குடியேறினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வந்தனா, ஸ்ரீகாந்த்தின் அதிகாரப்பூர்வ மனைவி என்பதால் வெளியேற்ற உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீகாந்த்தின் தாயார் ஜெயந்தி கிருஷ்ணமாச்சாரி இன்று காலை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ஸ்ரீகாந்த்தின் வழக்கறிஞர் பாண்டியனும் வந்தார்.

ஆணையரை சந்தித்த ஜெயந்தி, வந்தனா அத்துமீறி வீட்டில் குடியேறியுள்ளார். அவரை வெளியேற்றக் கோரி ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக பின்னர் பாண்டியன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X