அய்யோ கடவுளே.. சித்தப்பாவுக்காக இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய ஸ்ரீகாந்த் தேவா!

சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 68. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவரின் உயிர் பிரிந்த நிலையில், இன்று வளவசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர்கள் தான் இசையமைப்பாளர் தேவாவின் சகோதர்கள் சபேஷ் - முரளி. இவர்கள் இருவரும் இணைந்து மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், கோரிப்பாளையம், மிருகம், ஆட்டோகிராஃப், பட்டாளம் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர்கள் தான் இசையமைத்துள்ளனர்.

Sabesan Srikanth Deva

இசையமைப்பாளர் சுபேஷ்: இந்நிலையில், இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சபேஷின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சபேஷின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், பாடகி கிரேஸ், இயக்குநர்கள் பேரரசு, ஆர்வி உதயகுமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெய் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

கதறி அழுத தேவா: தம்பியின் உடலைப்பார்த்து கதறி அழுத தேவா, எங்க குடும்பத்தில் இப்படி நடக்கும் என்று நாங்க எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு ரொம்ப பக்கபலமாக என் தம்பி சபேஷ் இருந்தார். முந்தாநாள் ப்ரைன்ல ஸ்ட்ரோக் வந்து திடீர்னு மருத்துவமனையில் அனுமதித்தோம். எதாவது ஒரு மிராக்கிள் நடக்குமானுதான் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்லயே வச்சிருந்தோம். அப்படி எதுவும் நடக்கல. இதுக்கு அப்புறம் எந்த ஜென்மத்துல பார்க்க போகிறேன் என்று தெரியவில்லை. சபேஷ் எனக்கு தம்பியாக பொறக்கப் போறாரு. இதோட எந்த ஜென்மத்துல சபேஷுக்கு அண்ணனா நான் பொறக்கப் போறேன்னு தெரியவில்லை என தேவா கதறி அழுதபடி பேசி இருந்தார்.

உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது: சபேசன் இறுதி சடங்கு மாலை 4 மணி அளவில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.ன அதைத்தொடர்ந்து அவரின் உடல் அடக்க வளசரவாக்கம் உள்ள பிருந்தாவனம் இடுகாடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் தனது தம்பியின் உடலை பார்த்தபடி கண்ணீர் விட்டழுத தேவா மற்றும் அவரது சகோதரர்கள் வாகனத்தில் இருந்தனர். தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா, தனது சித்தப்பாவுக்காக இறுதி ஊர்வலத்தில் கண்ணீரோடு நடனமாடினார். அது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இதையடுத்து, வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் சபேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X