நூறு படங்களைத் தொட்ட ஸ்ரீகாந்த் தேவா!

By Shankar

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா தன் நூறாவது படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு ப்ரியமுடன் ப்ரியா.

பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, ஈ, ஆழ்வார், சரவணா, தோட்டா, புலிவேசம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார், இப்போது 100வது படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட்

குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட்

குத்துப் பாடல்கள் ஸ்பெஷலிஸ்ட் என கோடம்பாக்கத்தில் அறியப்பட்டவர் ஸ்ரீகாந்த் தேவா. விஜய் போன்றவர்களுக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் குத்துப் பாடல் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

100வது படம்

100வது படம்

தற்போது அவர் 'பிரியமுடன் ப்ரியா' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. இது அவருக்கு 100வது படமாகும். அசோக், ரேஷ்மி கெளதம் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார்.

1000 படங்கள்...

1000 படங்கள்...

100 படத்திற்கு இசையமைத்துள்ளது பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், "பிரியமுடன் ப்ரியா எனது 100வது படம். இந்தப் படத்துக்காக ஸ்பெஷலாக இசையமைப்பது கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எனது முழு திறமையை கொடுத்து கொண்டு தான் வருகிறேன். முதல் படத்தில் தொடங்கி இப்போது 100வது படம் வரை அப்படித்தான். இனியும் அது தொடரும். இன்னும் 1000 படங்களுக்கு இசையமைக்க வேண்டும்.

தேவா சொன்ன அட்வைஸ்

தேவா சொன்ன அட்வைஸ்

இசையில் நான் தான் பெரிய ஆள், எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க கூடாது, அப்படி நினைத்தால் அது நம்மை அழித்துவிடும், இது, என் அப்பா, எனக்கு சொல்லிய அறிவுரை. நான் இந்தளவுக்கு வளர காரணமான என் பெற்றோர்கள், எனக்கு 'டபுள்ஸ்' படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாண்டியராஜன் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் நன்றி," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X