ஸ்ரீகாந்த், விஜே பப்பு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில்!

சென்னை : விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே பப்பு.

டிஆர்பி-யில் நம்பர் ஒன்னில் இருந்த குக் வித் கோமாளி இரண்டு சீசன்களிலும் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்வித்தார்.

சின்னத்திரையைத் தொடர்ந்து இப்பொழுது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக படங்களில் ஒப்பந்தமாகி வரும் பப்பு நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விஜே பப்பு

விஜே பப்பு

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் என பலர் இப்பொழுது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இளம் தொகுப்பாளர் விஜே பப்பு வரிசையாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி என பிரபலமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் சின்னத்தம்பி உள்ளிட்ட சில சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

கதாநாயகனாக

கதாநாயகனாக

வணக்கம் தமிழா தயாரிப்பில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் பெயரிடப்படாத படத்தில் பப்பு ஏற்கனவே கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கன்னி மாடம் ஸ்ரீ ராம் கார்த்திக் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் . இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரேம்ஜி அமரன்

பிரேம்ஜி அமரன்

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரேம்ஜி அமரன் கலக்கலான பாடல் ஒன்றை பாடியுள்ளார். பாடல் பதிவு சமீபத்தில் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் காதல் கலந்த காமெடி வெப்சீரிஸ் ஒன்றிலும் பப்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில்

இறுதிகட்ட படப்பிடிப்பில்

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக பப்பு ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு 90% முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . நடிகர் பிளாக் பாண்டி இதில் காமெடியனாக நடிக்க வெத்துவேட்டு பட இயக்குனர் மணி பாரதி இயக்குகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் மளமளவென நடித்து வரும் விஜே பப்பு தொலைக்காட்சியை போலவே சினிமாவில் தனி இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X