என்னைவிட முட்டாள் யாருமில்லை.. நண்பன் படம் என்னால தான் லேட் ஆச்சு.. ஸ்ரீகாந்த் பட்ட அவமானங்கள்!

சென்னை: ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், பம்பரக் கண்ணாலே, உயிர், பூ, துரோகி, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட வெற்றிகளை பார்த்து வந்த ஸ்ரீகாந்த் திடீரென ஒரு கட்டத்திற்கு மேல் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் என்றாலும் தொடர்ந்து ஒரு நடிகர் தோல்வியை சந்தித்து வந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் இருந்து ஓரங்கட்ட படுவார். அப்படி ஒரு நிலைமை தான் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் ஏற்பட்டது. பல வருடங்கள் கழித்து தனக்கு என்னென்ன சிக்கல்கள் சினிமாவில் ஏற்பட்டது என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக கூறியுள்ளார்.

Srikanth Vijay Nanban Shankar

நண்பன் படத்தின் சூட்டிங் தாமதமாக முக்கிய காரணத்தையும் தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தையும் ஷங்கர் சாரிடம் வாங்கிய திட்டுக்கள் பற்றியும் கூறியுள்ளார்.

நிறைய பணத்தை இழந்திருக்கிறேன்: ரோஜா கூட்டம் படத்தில் நடிக்க தனக்கு வழங்கப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அந்தப் படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடிக்க 24 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு போடப்பட்ட பாடல் தனக்கு பிடிக்காத நிலையில், யுவன் சங்கர் ராஜாவிடம் சொல்லி பாடலை மாற்றினேன். சிம்புவை வைத்து "சைட் அடிப்போம், தம் அடிப்போம்" பாடல் உருவாக போராடினேன். படத்தின் தயாரிப்பாளர் பட்ஜெட் எகிறி விட்டது என்றும் இதற்கு மேல் பாடலுக்கு செலவு செய்ய முடியாது என்று கூறினார். என்னுடைய சம்பளத்திலிருந்து 4 லட்சம் ரூபாயை அந்தப் பாடலுக்காக கொடுத்தேன். இதே போல ஏகப்பட்ட படங்கள் நன்றாக உருவாக வேண்டும் என்பதற்காக நிறைய பணத்தை இழந்து இருக்கிறேன் என பேசியுள்ளார்.

Srikanth Vijay Nanban Shankar

என்னால் பாதித்த நண்பன் படம்: நண்பன் படத்தை ஷங்கர் சார் 6 மாதத்தில் எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த படம் உருவாக 8 மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு முழு காரணமும் நான் தான். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப் படுவது தெரியாமல் உதவி இயக்குநர் ஒருவரின் பேச்சைக் கேட்டு காலேஜ் போர்ஷன் என நினைத்துக்கொண்டு தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டேன். என்னைப் பார்த்ததும் ஷங்கர் சார் ஷாக் ஆகிவிட்டார்.

திட்டிய ஷங்கர்: எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் நீங்க, கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி வந்து நிக்கிறீங்களே, உங்களுக்கு ஷேவ் செய்ய வேண்டுமென்றால் படப்பிடிப்பு தளத்திலே வந்து செய்திருக்கலாமே கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கவிருந்த நிலையில், என்னோட தாடி மற்றும் மீசை வளர்வதற்காக அத்தனை பேர் கால் ஷீட்டும் தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து அந்த காட்சியை ஷங்கர் சார் படம் ஆக்கினார் என்கிற ஷாக்கிங் தகவலை ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

விஜய்யிடம் தலைமை பண்பு இருக்கு: நடிகர் விஜய் இன்றைக்கு வேறலெவலில் உருவாகி இருக்கிறார். அவரிடம் அந்த தலைமை பண்பு அப்போதிலிருந்தே இருக்கிறது. தேவையில்லாமல் பேச மாட்டார். மற்றவர்கள் பேசுவதை உற்று கவனிப்பார். தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய நபர். நிச்சயம் அவர் நினைத்ததை சாதிப்பார். வெற்றி, தோல்வி இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஆனால், துணிந்து களத்தில் இறங்குகிற துணிச்சல் தான் மிகவும் என ஸ்ரீகாந்த் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார்.

Srikanth Vijay Nanban Shankar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X