'சுவாமி ரா ரா'...கவர்ச்சியில் சுனைனா... தமிழ்ப் பதிப்பில் ஸ்ரீகாந்த்!
தெலுங்கில் வெற்றி பெற்ற சுவாமி ரா ரா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.
நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் ஸ்ரீகாந்த், ஓம்சாந்தி ஓம், நம்பியார் தனக்குப் பொருத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சந்தானம்
நம்பியாரில் கதையோடு அவர் அதிகம் நம்பியிருப்பது உடன் பயணிக்கும் சந்தானத்தை. சீனுக்கு சீன் காமடி களைகட்ட வைத்துள்ளதாம் சந்தானம்-ஸ்ரீகாந்த் ஜோடி. யூனிட்டே அதிர்ந்து சிரிக்கும் அளவிற்கு காட்சிகளை வடிவமைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கணேஷா.

கவர்ச்சியில் சுனைனா
இதுவரை லிட்டர் கணக்கில் எண்ணெய் விட்டு படிய தலைவாரிய கிராமத்துப் பெண்ணாகவே பெரும்பாலும் நடித்து வந்த சுனைனா, இதில் கவர்ச்சி மிளிரும் நகரத்து பெண்ணாக வலம் வருகிறார்.

இறுதிக் கட்டத்தில்
விஜய் அண்டனி இசை, எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு, என பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது நம்பியார். கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சுவாமி ரா ரா
ஸ்ரீகாந்துக்கு நம்பியார் ஓகே. சரி அடுத்து என்ன? என்ற கேள்விக்கு விடையாக தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'சுவாமி ரா ரா' வை தமிழுக்கு தூக்கி வருகிறார். சுதீர் வர்மா இயக்கிய க்ரைம் சப்ஜெக்டான சுவாமி ரா ரா வெகு விரைவில் தமிழ் பேச இருக்கிறது.

முன்னணி ஹீரோயின்
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











