திரைத் துளி
ரோஜாக் கூட்டம் படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த் கார் விபத்தில் காயமடைந்தார். அவரது உதடு கிழிந்தது. இதையடுத்துஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரீகாந்த் அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டன் வீட்டுக்குச்சென்றார். அங்கு ஸ்டண்ட் பயிற்சி எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் காரில் திரும்பினார்.
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் குறுக்கே வந்துவிட்ட சைக்கிள் சிறுவன் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக காரைத்திருப்பினார். அப்போது கார் சுவரில் மோதியது. இதில் கண்ணாடி உடைந்தது.
ஸ்டியரிங் வீலில் முகம் மோதியதில் அவரது உதடு கிழிந்து தொங்கியது. தலையிலும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சம்பவத்தால் ஏப்ரல் மாதத்தில்படப்பிடிப்பு ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications