GOAT: சங்கீதா எங்க ஊரு பொண்ணு.. விஜய் கூட த்ரிஷா ஆடினால் தியேட்டரைக் கொளுத்துவேன் - இலங்கை பிரபலம்!
ஜெர்மனி: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும், படம் என்றால் அது தி கோட். நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால், சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அவரது கடைசி இரண்டாவது படம் ஆகும். இப்படி இருக்கும்போது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் நாளே ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படம் தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்து வருகின்றது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் நடிகை த்ரிஷா, மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கோட் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் விஜய்க்கு டீ-ஏஜிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தினைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்த திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்டவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் திருப்தி கொடுக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியான காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டரே அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர். மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மட்ட பாடலில் கில்லி படத்தில் இடம் பெற்றுள்ள 'அப்படிபோடு' பாடலின் நடன அசைவுகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது.

இலங்கைத் தமிழர்: இப்படியான நிலையில், இலங்கைத் தமிழரான திருநங்கை தனுஜா, கோட் படத்தினை தனது தோழிகளுடன் ஜெர்மனியில் பார்த்துள்ளார். படம் பார்ப்பதற்கு முன்னதாக ஒரு வீடியோவை தனது மொபைலில் ரெக்கார்டு செய்துள்ளார். அதில் பேசிய விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " இன்னைக்கு நாங்க கோட் படம் பார்க்க வந்துள்ளோம். இந்தப் படத்தினை நாங்க விஜய்க்காக பார்க்க வரவில்லை. அவருடைய மனைவி சங்கீதா அக்காவுக்காகத்தான் பார்க்க வந்துள்ளோம். சங்கீதா அக்கா எங்க ஊரு (இலங்கையில் உள்ள யாழ்பாணம்) பொண்ணு. அவங்க வீட்டுக்காரர் நடிச்ச படம் அப்படிங்கறதாலதான் இந்தப் படத்தை பார்க்க வந்தோம். இல்லை என்றால் இந்தப் படத்தைப் பார்க்க நாங்க வந்திருக்க மாட்டோம்.

சங்கீதா: எங்க சங்கீதா அக்காவுக்காகத்தான், அவருடைய கணவர் நடிக்கும் கடைசி படம் என்பதற்காகத்தான் வந்துள்ளோம். படத்தின் டிக்கெட்டுக்கு இருவருக்கு 50 யூரோவும், பாப்கார்ன் எல்லாம் சேர்த்து, மொத்தம் 100 யூரோ வந்துடுச்சு. இவ்வளவு செலவு செய்து நாங்கள் படம் பார்க்க வந்துள்ளது, உங்களுக்காகவும் உங்களின் மகன் சஞ்சய்க்காகவும்தான். படம் பார்த்துட்டு படம் எப்படி இருக்குனு சொல்றோம்.

த்ரிஷா: படத்தில் திரிஷா ஒரு பாட்டுக்கு ஆடுகின்றாராம். த்ரிஷா ஆடும்போது தியேட்டரையே கொழுத்திவிட்டுவிடுவேன். சங்கீதா அக்கா நீங்க கவலைப்படாதீங்க. த்ரிஷா ஆடும்போது நான் தியேட்டரையே கொழுத்து விட்டுவிடுவேன். சங்கீதா அக்கா, நான் உங்களுக்காக நிற்பேன். நான் உங்கள் ஊர் பொண்ணு. கவலைப்படாதீங்க அக்கா" என பேசியுள்ளார்.

ட்ரெண்ட்: இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த சிலர் இணையத்தில் ட்ரெண்டாக தனுஜா இவ்வாறு பேசி வீடியோ பதிவிட்டுள்ளதாக பேசி வருகின்றனர். மேலும் திருநங்கை தனுஜா, இலங்கைத் தமிழர் மட்டும் இல்லாமல், பல் மருத்துவரும் கூட. மேலும் தனது சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டவற்றை தனது ஆட்டோபயோகிராபி புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்புத்தகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.



Click it and Unblock the Notifications











