நடிகர் பிரசாந்த் என்னை ஏமாத்திட்டாரு.. இலங்கையை சேர்ந்த பெண் பரபரப்பு புகார்.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி பண மோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, வின்னர் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் பிரசாந்த்.

அவரது நடிப்பில் விரைவில் அந்தகன் படம் ரிலீசாக காத்திருக்கிறது.

பிரசாந்த் மீது புகார்

பிரசாந்த் மீது புகார்

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி எனும் பெண் மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு வந்த அந்த பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகாரை வாய் மொழியாக அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 லட்சம் மோசடி

10 லட்சம் மோசடி

சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் அந்த பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார். மேலும், நடிகர் பிரசாந்த் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்.

பிரசாந்த் தரப்பு

பிரசாந்த் தரப்பு

சென்னையில் உள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடிகர் பிரசாந்த் தரப்பும் புகார் கொடுத்துள்ளது. மேலும், அந்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே பெயரைக் கெடுக்க செய்யும் சதி என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீரென சுவிட்ஸர்லாந்தில் விமான ஊழியராக வேலை பார்க்கும் பெண் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு புகாரை சுமத்தியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தாமதமாகும் அந்தகன்

தாமதமாகும் அந்தகன்

இந்தி திரைப்படமான அந்தாதுன் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான அந்தகன் திரைப்படத்தை நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்க பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்தகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு மோசடி புகார் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X