பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இலங்கை செய்தி வாசிப்பாளர்.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் க்யூட் இணைப்பு!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள் உள்பட 20 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் விஜே மகேஸ்வரி, ரச்சிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் மற்றும் ஆங்கர் ஜனனி குணசீலனும் ஒருவர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்றைய தினம் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கவுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. விஜய் டிவியின் மிகவும் பிரதானமான இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

வித்தியாசமான நிகழ்வுகள்
இந்த சீசன்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். வித்தியாசமான பின்னணியில் வித்தியாசமான இடங்களில் இருந்து, வித்தியாசமான நாடுகளில் இருந்து ஒரே இடத்தில் ஒன்றுகூடும் போட்டியாளர்கள், அவர்களுக்கிடையிலான உணர்ச்சிகளின் கூட்டணி என்பதை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பொதுமக்களும் பங்கேற்கலாம்
இந்த சீசனில் பொதுமக்களும் பங்கேற்கும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் டிக்டாக் பிரபலம் புவனேஸ்வரி, மாடல் நிவாஷினி உள்ளிட்டவர்கள் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்
இந்த நிகழ்ச்சி இன்று மாலை பிரம்மாண்டமாக துவங்கவுள்ள நிலையில், நேற்றிரவே போட்டியாளர்கள் 20 பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து விட்டனர். இதனிடையே அடுத்தடுத்த ப்ரமோக்களையும் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து வெளியிட்டு வருகிறது.

இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிவி செய்தி வாசிப்பாளர் மற்றும் ஆங்கர் ஜனனியும் பங்கேற்றுள்ளார். இவரும் டிக்டாக் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். இலங்கை தமிழ் மக்களையும் கவரும் வகையில் ஜனனியை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இணைத்துள்ளது விஜய் டிவி. முன்னதாக நடைபெற்ற சீசன்களில் தர்ஷன், லாஸ்லியா போன்றவர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











