ஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks
Recommended Video

சென்னை:ஸ்ரீ ரெட்டி அடுத்ததாக தன் மீது கூட புகார் தெரிவிக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் நானி வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் வாழ்க்கையை நரகமாக்கியதாக ஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகை ஸ்ரீ ரெட்டி முன்பு தெரிவித்தார். இந்நிலையில் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதை பார்த்த நானி ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுடன், அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

விஷால்
ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் நானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால். எனக்கு நானியை நன்றாக தெரியும். அவர் என் நல்ல நண்பர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி
நானி மீது ஸ்ரீ ரெட்டி தற்போது தெரிவித்த புகார் மோசமானது. நானியை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் ஆண்கள் மற்றும் பெண்களிடம் எப்படி பழகுவார் என்று நன்கு தெரியும் என்கிறார் விஷால்.

ஆதாரம்
சும்மா யார் மீதாவது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு ஸ்ரீ ரெட்டி ஆதாரங்களை அளிக்க வேண்டும். அவர் யாராவது ஒருவரை தேர்வு செய்து புகார் கூறுகிறார். யார் கண்டால் அடுத்து என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் என்று விஷால் கூறியுள்ளார்.

சட்டம்
பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டம் சரியில்லை. எந்த பெண் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம் அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர் தன் நிலையை விளக்க பின்னரே வாய்ப்பு அளிக்கப்படும். இது சரியில்லை என்கிறார் விஷால்.

அமைதி
ஸ்ரீ ரெட்டி நானி மீது சுமத்திய குற்றச்சாட்டு குறித்து தெலுங்கு திரையுலகம் அமைதியாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழ் திரையுலகத்தை சேர்ந்த விஷால் குரல் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











