நலிந்த ஏழைகளுக்கு.. சத்தமில்லாமல் உதவி செய்த ஸ்ரீமன்!

சென்னை : கொரோனாவால் ஊரடங்கில் முடங்கிப் போன நலிந்த பல ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுத்து உதவி உள்ளார் ஸ்ரீமன்.

கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ,டாக்சி ஓட்டுனர்கள், அதிலும் பொழுதுபோக்கு துறையான திரைப்படத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் திரைக்கு பின் வேலை செய்யும் ஏராளமான உதவியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 Sriman has been helping for the poor

சினிமா துறையில் பல துணை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இருந்தாலும் நமக்கு பிடித்தவர்களின் ஒருவர் ஸ்ரீமன். புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் மாஸ்டர் வரை தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார்.

 Sriman has been helping for the poor

இவர் பல முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய், விக்ரம் , சூர்யா போன்ற அனைத்து நடிகர்களிடமும் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமன் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து இருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். சினிமா துறையில் தனக்கென ஒரு தனி பாணியை அவர் கடைபிடித்து வருகிறார் .

 Sriman has been helping for the poor

கொரோனா பாதிக்கபட்டுள்ள பலருக்கு பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் உதவி செய்த வண்ணம் உள்ளனர். உதவி செய்தவர் பெயர் சத்தமில்லாமல் ஒனொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது . அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்ரீமன் பெயரும் வெளிவந்தது .

 Sriman has been helping for the poor

அதிகமான அளவில் மளிகை பொருட்களை ஸ்ரீமன் வாங்கி செல்வதை பார்த்த சிலர், இந்த தகவலை வெளியிட்டு உள்ளனர். வந்த தகவல் உண்மையா என விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், பல மீடியா வட்டாரங்கள் வந்த தகவல் உண்மை தான் எனவும் கூறிவருகின்றனர் .

 Sriman has been helping for the poor

கொரோனாவால் முடங்கிப்போய் நலிந்த பல ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகை போன்ற பொருட்களை கொடுத்து உதவி செய்துள்ளார் ஸ்ரீமன். சத்தம் இல்லாமல் இவர் செய்த உதவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தான் மட்டும் இந்த உதவியில் ஈடுபடாமல் தன் குடும்பத்தினரையும் இதில் ஈடுபடுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு பிறகு ஸ்ரீமன் நடித்து கொண்டு இருக்கும் தெலுங்கு படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் எனவும் தெரிகிறது .

 Sriman has been helping for the poor

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X