ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போன விஜய்யின் நண்பர்
Recommended Video

சென்னை: விஜய்யின் நண்பர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய மன்னர்கள் படம் மூலம் கோலிவுட் வந்த ஸ்ரீமன் விஜய்யின் லவ் டுடே படம் மூலம் பிரபலமானார். விஜய்யின் நட்பு வட்டாரத்தில் ஸ்ரீமனும் ஒருவர்.
ஆள் சற்று பூசினாற் போன்று இருந்தாலும் விஜய்யுடன் சேர்ந்து பாடல்களுக்கு செம ஆட்டம் போட்டவர்.
புகைப்படம்
ஸ்ரீமன் பிச்சைக்காரர் என்றும் சொல்ல முடியாத, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூற முடியாத சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலா
ஸ்ரீமனின் புகைப்படங்களை பார்த்த ஒருவர் என்ன சார் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ஸ்ரீமன் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
அடையாளம்
இயக்குனர் பாலாவின் படங்களில் தான் நடிகர்களை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார். அதனால் தான் புகைப்படங்களை பார்த்தவர்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
காஞ்சனா 3
ஸ்ரீமன் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அந்த படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











