கொரோனாவுக்கு பின்.. மீண்டும் தொடங்கிய கேஜிஎஃப்: சாப்டர் 2 ஷூட்டிங்.. இந்த மாதத்தோடு முடிக்க திட்டம்

By

மங்களூரு: மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

Recommended Video

KGF Amma Archana Ultra model Picture • KGF 2 • Yash

கன்னட நடிகர் யஷ் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம், 'கே.ஜி.எஃப்'.

கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது.

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2

படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத்

மேலும் ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடைய மிரட்டல் லுக், வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக, மற்ற படங்களைப் போல இதன் ஷூட்டிங்கும் தடைபட்டு இருந்தது.

முடிக்கவில்லை

முடிக்கவில்லை

இதனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. 'படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. அதில் முக்கியமானது சண்டைக் காட்சி. அனுமதி கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கும் ' என்று படக்குழு சார்பில் ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு இருந்த இந்தப் படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங், மங்களூரில் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் 8 மாதத்துக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் படத்தின் ஹீரோயின் ஶ்ரீனிதி ஷெட்டி. இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் கவுடா

கார்த்திக் கவுடா

இதற்கிடையே இதன் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கார்த்திக் கவுடா, கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நாளை (இன்று) கலந்துகொள்கிறார் யஷ். இந்த மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது என்று கூறியுள்ளார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

இதற்கிடையே, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் கொரோனா காலகட்டத்தில் நடந்துவந்தன. நுரையீரல் புற்றுநோய் காரணமாக, நடிகர் சஞ்சய் தத் சினிமாவுக்கு இடைவெளி விட்டுள்ளார். இதனால் அவர் இல்லாமல் அந்தக் காட்சியை எடுப்பது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X