நான் #Petta பற்றி 'அப்படி' சொல்லவில்லை: பாடகர் ஸ்ரீனிவாஸ் விளக்கம்
Recommended Video

சென்னை: பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட ஒரு ட்வீட்டால் சமூக வலைதளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பேட்ட இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருவரும் சேர்ந்து ரஜினியை டூ டூ டூ மச்சாக புகழ்ந்து தள்ளி பார்வையாளர்களை கடுப்பாகினார்கள்.
இந்நிலையில் பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட ட்வீட் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாஸ்
இசை வெளியீட்டு விழாக்களில் தற்போது இசை முக்கியம் இல்லாமல் போய்விட்டது என்று தனது கவலையை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் பாடகர் ஸ்ரீனிவாஸ்.

புரிதல்
ஸ்ரீனிவாஸ் பேட்ட இசை வெளியீட்டு விழாவை பற்றி தான் அப்படி ட்வீட் போட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டனர். அவர் ட்வீட் செய்த டைமிங் அப்படி.
ரஜினி படம்
நான் பேட்ட பற்றி பேசவில்லை. ரஜினி படம் என்றால் ரஜினி மட்டும் தான் கவனத்தை ஈர்ப்பார். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இசை வெளியீட்டு விழாக்கள் இசை மற்றும் இசை கலைஞர்களை பற்றியதாக இருக்க வேண்டும். விண்ணைத் தாண்டி வருவாயா தான் முறையாக நடந்த கடைசி இசை வெளியீட்டு விழா. கவுதமுக்கு வாழ்த்துக்கள் என்று விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.
எதிர்ப்பு
ஸ்ரீனிவாஸின் கருத்துக்கு ஆதரவும் கிடைத்துள்ளது, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











