ஒரேயொரு ட்வீட், ஆனால் 2 பேருக்கு விளாசல்: ஸ்ரீப்ரியா ரொம்ப தெளிவு
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி கேவலமாக பேசினார். மேலும் பொள்ளாச்சியில் பல அப்பாவி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதையும் கொச்சைப்படுத்தினார்.
இந்நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.
பார்வையாளர்கள்
பேச்சாளர்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்...தவறானகருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்...இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்! என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் ஸ்ரீப்ரியா ட்வீட் செய்துள்ளார்.

ராதாரவி
ஸ்ரீப்ரியாவின் ட்வீட் ராதாரவிக்கும் பொருந்தும், தற்போது உள்ள அரசியல் சூழலுக்கும் பொருந்தும். லோக்சபா தேர்தல், இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஸ்ரீப்ரியாவின் ட்வீட் அவர்களுக்கும் பொருந்தும்.
கமெண்ட்
ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவர் ராதாரவியை பற்றி தான் பெயர் குறிப்பிடாமல் பேசுகிறார் என்கிறார்கள்.

நயன்தாரா
ராதாரவி பல காலமாக இப்படித் தான் பேசி வருகிறார். அப்பொழுது எல்லாம் கண்டு கொள்ளாத திரையுலக பிரபலங்கள் தற்போது நயன்தாரா என்றதும் கண்டனம் தெரிவிப்பது மட்டும் சரியா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











