'அப்படி' சொல்ல மக்கள் நீதி மய்யத்திற்கு தைரியம் இருக்கு, உங்களுக்கு?: ஸ்ரீப்ரியா பொளேர்
சென்னை: எங்களுக்கு தைரியம் இருக்கு, உங்களுக்கு இருக்கிறதா என்று நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக நாயகனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியான நடிகை ஸ்ரீப்ரியா தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தமிழகத்தில் ஒரு விரல் புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறார்.
இது குறித்து ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீப்ரியா
மதுரை தந்தி டிவி மக்கள் மன்றத்தின் ‘ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு?'நிகழ்ச்சியில் அரசியலில் தங்கள் அதிருப்தியை மதுரை வீரர்கள் அங்கேயே பதிவு செய்தார்கள்...ஒரு புரட்சி வெடித்ததைப்போல் இருந்தது...குரலால் மட்டுமல்ல விரலால் கூட புரட்சி வெடிக்க வேண்டும்.
வாக்கு
ஊழலற்ற ஆட்சி தேவை என்று சிரிக்காமல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுக்கமாட்டோம்...பணம் வாங்காதீர்கள் என்று சொல்லும் தைரியம் உள்ளதா?மக்கள் நீதி மய்யம் சொல்லும்...
அரசியல்வாதிகள்
ஓட்டுக்கு பணம் தர மாட்டோம், நீங்களும் வாங்காதீர்கள் என்று அரசியல்வாதிகள் கூற மாட்டார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ரூபாய் நோட்டு
பணம் வாங்காதீர்கள் என்று மக்களிடம் கூற தைரியம் உள்ளதா என்று கேட்கிறார் ஸ்ரீப்ரியா. ஆனால் ரூபாய் நோட்டை வினியோகிக்க புதுப் புது ஐடியா கண்டுபிடிக்கிறார்கள். அது குறித்த வீடியோக்கள் கூட வெளியாகி மக்களை வியக்க வைக்கின்றன என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











