»   »  அட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை

அட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை பார்த்து கடுப்பாகி நடிகை ஸ்ரீப்ரியா தனது டிவியை ஆஃப் செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமெடி டாஸ்க்குகள் கொடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக் பாஸ்.

டாஸ்க் செய்யும்போது சில நேரம் போட்டியாளர்கள் காயம் அடைகிறார்கள். இந்நிலையில் தான் கார் டாஸ்க் கொடுத்தார் பிக் பாஸ்.

சினேகன்

சினேகன்

கார் டாஸ்க்கில் சினேகன், சுஜா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் காரிலேயே தூங்கி எழுந்து எதுவும் சாப்பிடாமல் கூட இருந்தார்கள். இறுதியில் சுஜா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

பாவம்

பாவம்

காரில் சுஜாவும், சினேகனும் கஷ்டப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் இருவருக்கும் சமமான பாயிண்ட்ஸ் கொடுத்து இருவரும் வெற்றியாளர்கள் என்று அறிவித்திருக்கலாமே என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீப்ரியா

பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்த்து ட்வீட் பண்ணும் நடிகை ஸ்ரீப்ரியா கார் டாஸ்க்கை பார்த்து கடுப்பாகிவிட்டார். ஆளுக்கு 10 கொடுத்து முடிங்கப்பா என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டிவி

கார் டாஸ்க்கை பார்த்து பார்த்து கடுப்பான ஸ்ரீப்ரியா இனியும் பொறுக்க முடியாது என்று டிவியை ஆஃப் செய்துவிட்டார்.

ட்வீட்

கார் டாஸ்க் கொடுமை முடிந்தவுடன் தனக்கு ட்வீட் செய்யுமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார் ஸ்ரீப்ரியா.

முடிஞ்சு போச்சு

டாஸ்க் முடிந்து சுஜா வென்றுவிட்டார். பிக் பாஸ் பார்ஷியாலிட்டி பார்க்கிறார் என்று ஒருவர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Sripiriya got fed up with the car task given to the Big Boss contestants and switched off her TV.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil