போட்டோவை நெருப்பில போட்டே எரிச்சாங்க.. இப்ப என்ன வந்துச்சு அவங்களுக்கு? கேள்வி எழுப்பிய பிரபலம்!

சென்னை: சோமசேகரிடம் அந்த முட்டைல என் போட்டோ இருக்கு அதை தூக்கி எறியக் கூடாது என அப்படி வார்ன் பண்ணும் அர்ச்சனாவுக்காக சூப்பர் கேள்வியை எழுப்பியுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் ஸ்ரீபிரியா, அதனை விமர்சித்தும் பாராட்டியும் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகிறார்.

இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் பங்கம் செய்து கழுவி ஊற்றும் நிலையில், நடிகை ஸ்ரீபிரியாவும் அதையே செய்து வருகிறார்.

கோழியான அர்ச்சனா

கோழியான அர்ச்சனா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 74ம் நாள் எபிசோடில் கோழியாக வேடமிட்டு தங்க முட்டையை காப்பாற்ற வித்தியாசமான யுக்திகளை எல்லாம் ரொம்பவே ஸ்மார்ட்டாக கையாண்டார் அர்ச்சனா. எந்த கோழியும் யோசிக்காத அளவுக்கு, முட்டையை மறைக்க சொன்னால், தன்னையே வைக்கோல் போட்டு மறைத்துக் கொண்டதை பார்த்து ரசிகர்கள் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியாமல் அதிர்ந்து போனார்கள்.

முட்டையை தொட்ட ரியோ

முட்டையை தொட்ட ரியோ

அப்படி இருந்தும், பஸர் அடித்த சில நொடிகளிலேயே அர்ச்சனாவின் அந்த முட்டையை ரியோ ராஜ் ஈஸியாக தொட்டு விட்டார். அடுத்ததாக சோமசேகரும் உள்ளே புகுந்து முட்டையை தொட, முட்டை உடைந்து விட்டது. இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதத்தை அதை உருவாக்கியது.

தூக்கி அடிச்ச சோம்

தூக்கி அடிச்ச சோம்

கோபத்தில் சோமசேகர் அந்த உடைந்த முட்டையை தூக்கி தரையில் அடித்தார். உடனே, கடுப்பான அர்ச்சனா, அதில் என் போட்டோ ஒட்டி இருக்கு, நீ எப்படி அப்படி தூக்கி எறியலாம். உனக்கு என்ன தைரியம் என சந்திரமுகி ஜோதிகா மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தார்.

போட்டோ பஞ்சாயத்து

போட்டோ பஞ்சாயத்து

அர்ச்சனா கிளப்பிய போட்டோ பஞ்சாயத்து சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அர்ச்சனாவின் போட்டோ போட்ட முட்டையை சோம் தூக்கி எறிந்தது தவறு என்றும், அதற்கு அர்ச்சனா கொடுத்த ரியாக்‌ஷன் ரொம்ப ஓவர் என்றும் கருத்துக்கள் வலம் வருகின்றன.

சூப்பர் கேள்வி

சூப்பர் கேள்வி

இந்நிலையில், நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். முன்னதாக, போட்டோக்களை தீயிட்டுக் கொளுத்தி நாமினேட் செய்யும் போது அர்ச்சனா ஏன் இப்படி பதறவில்லை. ஈஸியா அடுத்தவரின் போட்டோவை தீயில் போட்டு எரித்துவிட்டு, இப்போ முட்டை மீது உள்ள போட்டோவுக்கு ஏன் வெட்டி சீன் போடுகிறார் என்கிற ரீதியில் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

ஜூலிக்கே குரு

ஜூலிக்கே குரு

நடிகை ஸ்ரீபிரியாவின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் அர்ச்சனாவின் அட்டகாசத்திற்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். டிராமா மேக்ஸ், டிராமா குயின், அழுகிணி அர்ச்சனா என ஏகப்பட்ட பட்டப்பெயர்களை கொடுத்து திட்டி வருகின்றனர். சில நெட்டிசன்கள், ஜூலிக்கே இவர் தான் குரு என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X