»   »  ரணகளத்திற்கு மத்தியிலும் இப்படி ஒரு நட்பு: குஷ்புவின் போட்டோவை பாருங்க

ரணகளத்திற்கு மத்தியிலும் இப்படி ஒரு நட்பு: குஷ்புவின் போட்டோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வரும் நிலையில் அவரின் கணவர் ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை, குஷ்பு நடத்தும் நிஜங்கள் ஆகிய குடும்ப பஞ்சாயத்து இல்லை கட்டாயப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை கட்டப் பஞ்சாயத்து என்று அவரே கூறியுள்ளார்.

வேதனை

வேதனை

நான்கு சுவர்களுக்குள் வைத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை டிஆர்பிக்காக டிவியில் ஊர், உலகமெல்லாம் பார்க்க தீர்க்கிறார்களே என ஸ்ரீப்ரியா வேதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக அவர் ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ராஜ்குமார்

குஷ்புவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து வருகிறார் ஸ்ரீப்ரியா. இந்நிலையில் ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் குஷ்புவுடன் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குஷ்புவும், ராஜ்குமாரும் நண்பர்கள் ஆவர்.

புகைப்படம்

புகைப்படம்

குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் அது அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் ஸ்ரீப்ரியா எங்கே என கேட்டுள்ளார்.

English summary
While actress Sripriya is against Khushbu's Nijangal programme, the actress cum politician partied with Rajkumar. Rajkumar is none other than Sripriya's husband.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos