வைரமுத்து விவகாரம்: சின்மயியை பாராட்டிய ஸ்ரீ ரெட்டி
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பாடகி சின்மயியை பாராட்டியுள்ளார்.
மீ டு ஹேஷ்டேக் மூவ்மென்ட் முழுவீச்சில் வேகம் எடுத்துள்ளது. திரையுலக பெண்கள் பலரும் பிரபலங்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வைரமுத்து குறித்து வெளிப்படையாக தெரிவித்த சின்மயிக்கு நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பாடகி சின்மயியிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மறுத்ததற்கு பிரபல அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் பதிவிட்டிருந்தார்.
சின்மயிக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்கிறார்.
அதற்கு கேப்ஷனாக, இந்த மூவ்மென்ட்டில் வெளியே வந்ததுக்கு நன்றி! எல்லோரும் அவருடைய தைரியத்தை பாராட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











