விடமாட்டார் போலிருக்கே..டைரக்டர் முருகதாஸை மீண்டும் வம்புக்கிழுத்த சர்ச்சை நடிகை.. விளாசும் ஃபேன்ஸ்
சென்னை: இயக்குனர் முருகதாஸை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார் அந்த சர்ச்சை நடிகை!
Recommended Video
சினிமாவில், வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் பெயர்களையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

பாலியல் புகார்கள்
பிரபல ஹீரோ ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி, இயக்குனர் கொரட்டலா சிவா, நடிகர் பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இயக்குனர் முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அப்போது பரபரப்பு புகார் கூறியிருந்தார். பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, பவன் கல்யாணை பற்றியும் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இதற்கு ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா
இந்நிலையில், தனது பேஸ்புக் பதிவில் தினமும் பல விஷயங்களை எழுதி வரும் ஶ்ரீரெட்டி, இயக்குனர் முருகதாஸை இன்று மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார். அதில், இயக்குனர் முருகதாஸ், பெண்களை திருடுவதை போல கதைகளையும் திருடுகிறார். ஆனால், அவர்கள் எல்லாம் சினிமா ஜாம்பவான்களாம்.. பாவம் தமிழ் சினிமா என்று தெரிவித்துள்ளார்.

வேலை இல்லையா?
அதில் சில அநாகரிக வார்த்தைகளையும் ஶ்ரீரெட்டி சேர்த்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். தமிழ் சினிமா பற்றி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்று ஒருவர் கோபமாகக் கேட்டுள்ளார். 'இருக்கிற பிரச்னைல இதுவேறயா, முதல்ல தமிழ்நாட்டை விட்டு ஓடிடுங்க' என்று ஒருவர் கூறியுள்ளார்.

நெயில் பாலிஷ்
சில ரசிகர்கள், 'இதே வேலைதானா, உங்களுக்கு வேற வேலையே இல்லையா?' என்று கேட்க, இன்னும் சிலர் ஆபாசமாக கமென்ட் போட்டுள்ளனர். மற்றொரு பதிவில், யாராவது எனக்கு நெயில் பாலிஷ் போட்டு விட முடியுமா? என்று கேட்டுள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி. இதற்கும் ரசிகர்கள் கண்டபடி கமென்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











