Just In
- 4 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கும் ஸ்ரீரெட்டி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனக்காக நீதி கேட்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய அவர், தற்போது சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வரும் அவர், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி கொடூரம்.. மீடுல தான் பேசல இப்போவாவது பேசுங்களேன்.. பெரிய நடிகர்கள் மீது வரு கோபம்!
நேரில் சந்திப்பு:
அந்த வீடியோவில் அவர், "நான் விரைவில் சென்னை வந்து போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட அந்த பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

போராட்டம்:
இது 7 வருடங்களாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. பெண்கள் இப்படி குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக புகார் அளித்தால்தான் நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் போராடப் போகிறேன்.

சீர்திருத்தம் தேவை:
நம் நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். நீதித்துறையை சீர் செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது.

தண்டனை:
பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக பெரும் கவலையடைந்துள்ளேன். பலாத்கார குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்" என ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கோபமாகப் பேசியுள்ளார்.