Srividya - முடி எல்லாம் கொட்டி.. மஞ்சளாக முகம் மாறி.. இறக்கும் தருவாயில் ஸ்ரீவித்யா எப்படி இருந்தார் தெரியுமா?

சென்னை: நடிகை ஸ்ரீவித்யா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசனை காதலித்த அவர் பிறகு அந்த காதல் முறிந்ததால் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சுமூகமாக இல்லை. கடைசியாக அவர் புற்றுநோய் வந்து உயிரிழந்தார். இந்த சூழலில் அவரது அண்ணி ஸ்ரீவித்யா பற்றி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஸ்ரீவித்யா கதாநாயகியாகவும் நடித்தார். அவர் கதாநாயகியாக நடித்தபோது கமல் ஹாசனை காதலித்தார். அதனை இரண்டு பேருமே பின் நாட்களில் ஒத்துக்கொண்டனர். ஆனால் இரண்டு பேரின் காதல் பாதியிலேயே முடிந்தது. அதற்கு ஸ்ரீவித்யாவின் தாய்தான் காரணம் என்று கூறப்படுகிறது. கமல் ஹாசனுடனான காதல் முறிவுக்கு பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த அவர் தமிழில் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

Srividya Releation Talks about Srividyas Last Minutes

திருமணம்: அதன்படி காதலுக்கு மரியாதை, ஆனந்தம், தளபதி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர் தன்னுடைய கடைசி காலத்தில் கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். இதற்கிடையே ஜார்ஜ் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் ஸ்ரீவித்யாவுக்கு நினைத்தபடி சுமூகமாக அமையவில்லை. கடைசியில் கேன்சர் வந்து இறந்துபோனார். இந்த சூழலில் அவரது அண்ணி விஜயலட்சுமி தனியார் யூட்யூப் சேனலுக்கு ஸ்ரீவித்யா குறித்து பேசியிருக்கிறார்.

ஸ்ரீவித்யா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "2003ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டே அவர் மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. சில வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு புற்றுநோய் என்பது எங்களுக்கு தெரியவந்தது. காலப்போக்கில் அந்த கேன்சர் அவரது முதுகு எலும்புக்கும் பரவ ஆரம்பித்துவிட்டது.

பத்திரிகை செய்தி: இப்படிப்பட்ட சூழலில்தான் ஸ்ரீவித்யா அவரது இறுதி கால நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பத்திரிகை செய்தி வந்தது. அதற்கு பிறகு அவரது அண்ணனும் என்னுடைய கணவருமான சங்கரை உடனடியாக ஸ்ரீவித்யாவை பார்ப்பதற்கு அனுப்பி வைத்தேன். அங்கு சென்று அவர் பார்த்தபோது ஸ்ரீவித்யாவுக்கு முடி எல்லாம் கொட்டி, முகமெல்லாம் மஞ்சள் நிறமாக மாறி இருந்திருக்கிறது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர் கத்தியிருக்கிறார்.

ஏன் இங்க வந்த?: ஆனால் ஸ்ரீவித்யாவோ சங்கரை பார்த்து நீ ஏன் இங்கே வந்த. நீ அங்கே சென்று உன்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள் என சொல்லியிருக்கிறார். அதற்கு சங்கரோ அதெல்லாம் நான் செல்லமாட்டேன். இங்கேதான் இருப்பேன் என அடம் பிடித்திருக்கிறார். அதற்கு ஸ்ரீவித்யாவோ இல்லை என்னை பார்த்துக்கொள்ள எல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சமாதானம் செய்திருக்கிறார்.

கமலுடன் சந்திப்பு: அன்றைய தினம் மதியம்தான் கமல் ஹாசனை ஸ்ரீவித்யா சந்தித்தார். அதற்கு பிறகு நாங்கள் அவரை சென்று பார்க்கும்போது அவரது கண்கள் எல்லாம் வெளியே வந்து முகம் எல்லாம் மஞ்சள் படிந்து கை எல்லாம் காய்ந்து போய் சுயநினைவை இழந்திருந்தார். சில மணி நேரங்கள்தான் அவர் உயிரோடு இருக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது. பிறகு எங்களது கண் முன்னாலேயே அவளது உயிர் பிரிந்தது. அதன் பின்னர் இறுதி ஊர்வலம் சென்று 14 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X