ஜோதிகா குடும்பத்துக்கு இப்படி பேசுறதே வேலையா போச்சு.. இதோட நிறுத்திக்கோங்க.. எச்சரிக்கும் ஜீயர்!
சென்னை: கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை ஜோதிகாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். விருது விழா நடந்து முடிந்து ஒரு மாதத்துக்கு மேலான நிலையில் கடந்த வாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
அதில் ஜோதிகா பேசிய காட்சிகளும் ஒளிபரப்பானது. அதில் பேசிய ஜோதிகா, தஞ்சாவூர் ஷுட்டிங் சென்றிருந்த போது அங்குள்ள தஞ்சை பெரிய கோவிலை எல்லோரும் பார்க்கச் சொன்னார்கள்.

பராமரிப்பு இன்றி
ஏற்கனவே அந்த கோவிலுக்கு சென்றுள்ள போதும் மீண்டும் போகலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் அதற்கு முன்பாக அங்கிருந்த அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த மருத்துவமனை எந்த பராமரிப்பும் இன்றி மோசமாக இருந்தது.

கோவிலுக்கு செலவு செய்யாதீர்கள்
மருத்துவமனையை பார்த்தப் பிறகு நான் கோவிலுக்கே செல்ல வில்லை. கோவிலுக்கு பெய்ண்ட் அடிக்க பராமரிக்க செய்யும் செலவுகள் மற்றும் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் பள்ளிக் கூடங்களுக்கும் வழங்குங்கள் என்று கூறியிருந்தார்.

பிரபலங்கள் கண்டனம்
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்களுக்கு செலவு செய்யாதீர்கள் என சொல்ல ஜோதிகா யார் என பலரும் வரிந்துக் கட்டினர். சமூக வலைதளங்களிலும் ஜோதிகாவை கடுமையாக விமர்சித்தனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஜோதிகா அப்படி பேசியிருக்கக்கூடாது என்று கூறினர்.

வருத்தமாக உள்ளது
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜரும் ஜோதிகாவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை பெருவுடையார் கோவில் குறித்து ஜோதிகா பேசியது வருத்தம் அளிக்கிறது என்ற கூறிய ஜீயர், கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்கிறோம்.

ஜீயர் எச்சரிக்கை
ஜோதிகாவின் குடும்பத்தார் பல முறை இப்படி பேசியிருக்கிறார்கள் என்றும் இப்படி பேசுவது மிகவும் தவறு என்றும் கூறினார். மேலும் இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











