என்னோடதை பறிச்சு.. அப்படியே.. குரங்குகளிடம் சிக்கிய சிரேயா ரெட்டி.. பரபர வீடியோ!

கொடைக்கானல் : டிவி தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை சிரேயா ரெட்டி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார்.

2002 ம் ஆண்டு விக்ரம் நடித்த சாமுராய் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். பிறகு திமிரு, வெயில், காஞ்சிவரம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2008 ம் ஆண்டு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இருப்பினும் தனது கணவருடன் சேர்ந்து சில படங்களை தயாரித்து வந்தார். 2018 ம் ஆண்டு சில சமயங்களில் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

குரங்குகளுடன் ஏற்பட்ட அனுபவம்

குரங்குகளுடன் ஏற்பட்ட அனுபவம்

தனது அன்றாட நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாகக் கொண்ட இவர், சமீபத்தில் கொடைக்கானல் சென்றார். அப்போது இவர் தங்கியிருந்த இடத்தில் குரங்குகள் சில புகுந்து செய்த அட்டகாசத்தை 2 வீடியோவாக பகிர்ந்துள்ளார். குரங்குகளுடன் ஏற்பட்ட வினோதமான அனுபவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகள் அட்டகாசம்

அதில் ஒரு வீடியோவுடன், பால்கனியில் வித்தியாசமாக சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். அங்கு புகுந்த சில குரங்குகள் நான் வைத்திருந்த நட்ஸ்களை சிதறடித்து, கொறித்துக் கொண்டிருந்தன. அவர்களும் அன்று புரோட்டின் உணவுகளை எடுத்துக் கொண்டனர் என கருத்து பதிவிட்டிருந்தார்.

புரோட்டின் பிடிச்சிருக்கு

மற்றொரு வீடியோவில், ஜன்னல் வழியாக ஸ்ரேயாவின் அறைக்குள் புகுந்த குரங்குகள் அவரது பையில் வைத்திருந்த நட்ஸ்களை எடுத்து சாப்பிட்டுள்ளன. அதில், அவர்களுக்கு புரோன் ரொம்ப பிடித்துள்ளது போல என கூறி இருந்தார். குரங்குள் செய்த அட்டகாசத்தை வித்தியாசமாக பதிவிட்டுள்ள சிரேயாவின் பதிவை பலரும் ரசித்துள்ளனர்.

போலீஸ் உடையில் ஒர்க் அவுட்

ஃபிட்னஸில் அதிக அக்கறை கொண்ட சிரேயா ரெட்டி, அவ்வப்போது தான் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சமீபத்தில் போலீஸ் உடையில், கம்பி ஒன்றை பிடித்து அவர் அந்தரத்தில் தொங்கிய வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை 50,000 க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

 காத்திருக்கும் அண்டாவ காணோம்

காத்திருக்கும் அண்டாவ காணோம்

சிரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் படம் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால் மீண்டும் தாமதமாகி வருகிறது. அண்டாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காமெடி படம். இதில் சிரேயா ரெட்டி, சாந்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். வேல்மதி - சுசீந்திரன் இணைந்து இயக்கிய இப்படம் தேனி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் படமாக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X