Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷாருக் நல்லாத்தான் இருக்கார், சும்மா ஊதிப் பெருசாக்காதீங்க: சல்மான் கான்
மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு லேசான காயம் தான். அதை ஊதி பெரிதுபடுத்தாமல் போய் எனது ஜெய் ஹோ பட வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் சல்மான் கான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் தனது தோழி ஃபரா கான் இயக்கத்தில் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பு நடக்கையில் ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு காயம் ஏற்பட்ட செய்தி அறிந்த ஊடகங்கள் 'படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கான் காயம்' என்று இதிலேயே சிறிது நேரம் கவனம் செலுத்தின.
லேசான காயம்
ஷாருக்கானுக்கு லேசான காயம் என்பதால் சிகிச்சையை முடித்துக் கொண்டு அவர் காரில் ஏறி ஷூட்டிங்கிற்கு சென்று மீண்டும் தனது வேலையை நேற்றே துவங்கிவிட்டார்.
சல்மான்
ஷாருக்கிற்கு காயம் ஏற்பட்டது பற்றி பத்திரிக்கையாளர்கள் சல்மான் கானிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.
ஜெய் ஹோ
ஷாருக்கிற்கு எனது ஜெய் ஹோ படம் நாளை(இன்று) ரிலீஸாகவிருக்கும்போது தானா இது நடக்க வேண்டும்? சும்மா இதை ஊதி பெரிதுபடுத்தாதீர்கள் என்றார் சல்மான்.
நலம்
ஷாருக்கானை யாரும் தாக்கிவிடவில்லை. அவர் சுயநினைவை இழந்துவிடவில்லை. அவர் நன்றாக உள்ளார். அதனால் ஜெய் ஹோவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சல்மான் கூறினார்.
மகிழ்ச்சி
ஷாருக் நலமாக இருப்பதை அறிந்து கொண்டோம். அவர் நல்லபடியாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று சல்மான் தெரிவித்தார்.
ஸ்டாலின்
ஜெய் ஹோ படம் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.