செல்போனில், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ விளையாடுங்கள்... ஷாரூக்குடன் கை குலுக்குங்கள்...
மும்பை: சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை வைத்து ஒரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெல்வோர், ஷாருக்கானை நேரில் சந்தித்து அளவளாவலாம்.
வழக்கமாக பட விழாக்களுக்கு அல்லது வேறு ஏதாவது விழாக்களுக்கு வரும்போதுதான் தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களைப் பார்க்க முடியும் ரசிகர்களால். ஆனால் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரசிகர்களை நேரில் சந்திக்க காத்திருக்கிறார்.

வீடியோ கேம்...
நீங்கள் ஒரு ஷாருக்கானின் தீவிர ரசிகராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒரு வீடியோ கேமை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பட புரோமோ...
இது மொபைல் போன்களுக்கானது. அதில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் புரோமோ அடங்கியுள்ளது.

நீங்களும் வெல்லலாம் ஒரு வாய்ப்பு...
அதில் அதிக பாயிண்ட்டுகள் எடுக்கும் ரசிகர்களை நேரில் சந்திப்பார் ஷாருக் கான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அதிக பாயிண்ட் எடுத்தால் ஷாருக்கானை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.

டவுன்லோட் ப்ளீஸ்....
இந்த கேமை செல்போனில் டவுன்லோட் செய்து கொண்டு ஆட வேண்டுமாம். விரைவில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப் போகிறதாம்.


Click it and Unblock the Notifications











