கமலின் விஸ்வரூபத்திற்கு கிராபிக்ஸ் வேலை பார்த்த ஷாருக் கான்!

By Sudha

மும்பை: பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தமிழகத்தில் முடக்கப்பட்டிருப்பதால் கமல்ஹாசன் மட்டுமல்ல, இன்னொரு பெரும் நடிகரும் கவலையில் உள்ளார். அவர் வேறுயாருமல்ல பாலிவுட் பாட்ஷா... ஷாருக் கான்தான். காரணம், இவரது ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் விஸ்வரூபம் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளைக் கவனித்துள்ளது.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் இப்படம் முடங்கிப் போயுள்ளது. அரசியல் காரணமாகவும் இப்படம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசனே மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் விஸ்வரூப முடக்கத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வருத்தமும், வேதனையும் தெரிவித்துள்ளார். இது துரதிர்ஷ்டவமானது என்றும் கூறியுள்ளார்.

ஷாருக் கானுக்கும் இப்படத்தில் ஒருமுக்கியப் பங்கு இருக்கிறது என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அவரது ரெட்சில்லீஸ் நிறுவனத்தின் கிராபிக்ஸ் பிரிவுதான், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளைக் கவனித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2006ல் தொடங்கிய ரெட்சில்லீஸ் கிராபிக்ஸ்

2006ல் தொடங்கிய ரெட்சில்லீஸ் கிராபிக்ஸ்

2006ம் ஆண்டு கெய்தான் யாதவ் மற்றும் ஹரேஷ் ஹிங்கோரனி ஆகியோருடன் இணைந்து ரெட்சில்லீஸ்.விஎப்எக்ஸ் என்ற தனது கிராபிக்ஸ் பிரிவைத் தொடங்கினார் ஷாருக். மும்பையில் இதன் அலுவலகம் அமைந்துள்ளது.

பிற படங்களுக்கும் கிராபிக்ஸ்

பிற படங்களுக்கும் கிராபிக்ஸ்

தனது படங்களுக்குரிய கிராபிக்ஸ் பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம்தான் செய்கிறார் ஷாருக். அது மட்டுமல்லாமல் வெளிப் படங்களுக்கும் செய்து தருகிறார்கள். அதில் பெரிய படமாக கூறப்படுவது விஸ்வரூபம்தான்.

3 மாடிக் கட்டடம் .. பிரமாண்ட டெக்னாலஜி

3 மாடிக் கட்டடம் .. பிரமாண்ட டெக்னாலஜி

மிகப் பெரிய அளவிலான அலுவலகமாக இந்த கிராபிக்ஸ் பிரிவை ஷாருக் கான் நடத்தி வருகிறார். 3 மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் மாயா உள்ளிட்ட பல்வேறு வகையான கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.

இந்தியாவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமாகும் இது உயர்ந்து நிற்கிறது. ஷாருக் உள்ளிட்ட குழுவினரின் கடுமையான உழைப்பே இதற்குக் காரணம்.
இந்தியாவில் எந்த கிராபிக்ஸ் நிறுவனத்திடமும் இல்லாத பல்வேறு உபகரணங்களை இவர்கள் வைத்துள்ளது இவர்களின் தனிச் சிறப்பாகும்.

சர்வதேச தரத்தில் - ஒரே ஸ்டூடியோ

சர்வதேச தரத்தில் - ஒரே ஸ்டூடியோ

இந்தியாவிலேயே சர்வதேச தரத்திலான ஒரே கிராபிக்ஸ் ஸ்டூடியோ இது மட்டும்தானாம். ISO - 9001 மற்றும் ISO - 27001 சான்றுகளையும் இது பெற்றுள்ளது.

ரா ஒன் படத்துக்காக புகழ் பெற்றது

ரா ஒன் படத்துக்காக புகழ் பெற்றது

ஷாருக்கானின் ரா ஒன் படத்துக்காக இந்த நிறுவனம் செய்த கிராபிக்ஸ் வேலைகள் பெரும் பாராட்டுக்களைப் பெற்றன. அப்படத்தில் மொத்தம் 3500 ஷாட் கிராபிக்ஸ் வேலைகளைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X