ஷாருக்கானின் தயாரிப்பு அலுவலகத்தை டிசைன் செய்தது யார் தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு அலுவலகத்தை டிசைன் செய்தது நடிகை ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்காம்.
பாய்ஸ் படம் மூலம் தமிழ் படங்களுக்கு வந்தவர் ஜெனிலியா. அதன் பிறகு விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஜெயம் ரவியுடன் சேர்ந்து அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
இதற்கிடையே பாலிவுட் படங்களிலும் நடித்த அவர் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு
திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா படங்களில் நடிக்காமல் உள்ளார். கடந்த ஆண்டு மரணம் அடைந்த அவரது மாமனார் விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநில முதல்வராக இரண்டு முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்தேஷ்
இன்டீரியர் டிசைனிங் படித்த ரித்தேஷ் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் அலுவலகத்தை ரித்தேஷ் டிசைன் செய்து கொடுத்துள்ளார்.

ஷாருக்கான்
தனது அலுவலகத்தை டிசைன் செய்த ரித்தேஷுக்கு ஷாருக்கான் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். நன்றி ரித்தேஷ் விரைவில் வீட்டுக்கு காபி குடிக்க வர வேண்டும் என்று ஷாருக் தெரிவித்துள்ளார்.

நன்றி
பதிலுக்கு ரித்தேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் டிசைன்களை பார்க்காமலேயே என் மீது நம்பிக்கை வைத்து ரெட் சில்லீஸ் அலுவலகத்தை டிசைன் செய்ய அனுமதித்ததற்கு நன்றி ஷாருக்கான் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











