தூம் 4-ல் ஷாரூக்கான் மகன் அறிமுகம்?
தூம் 4 படத்தில் ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிங் கான், பாலிவுட் பாட்ஷா என அனைவராலும் அழைக்கப்படும் ஷாருக்கான், இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்.
சமீபத்தில் வெளியான இவரது 'ஹேப்பி நியூ இயர்' படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் தூம்-4 படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மகன் ஆர்யனுக்கு 21 வயதான பிறகுதான் சினிமாவில் அடி எடுத்து வைக்க வேண்டும், அதுவரை படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறி வந்தார்.
இப்போது, அதற்கு முன்பே ஆர்யனுக்கு பெரிய வாய்ப்பு வந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications