ஜாய் கிரிஸில்டா மகனை நேரில் பார்த்த முதல் நடிகை.. சூப்பரா கொஞ்சுறாங்களே.. செம க்யூட்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் துறையில் புகார் அளித்த ஜாய் கிரிஸில்டா; கடந்த மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். ஆனால் மாதம்பட்டியோ அந்தக் குழந்தை தன்னுடையது டி.என்.ஏ டெஸ்ட்டில் நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து; அந்த டெஸ்ட்டுக்கும் செல்லாமல் இருக்கிறார்.
தமிழ் திரைத்துறையில் இந்த ஆண்டு ஹெட்லைன்ஸாக மாறிய விவகாரங்களில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா இரண்டாவது திருமணம். இரண்டு பேரும் ரகசியமாக செய்துகொண்ட் திருமணத்திலிருந்து வெளியேற ரங்கராஜ் முயல; கடுப்பான ஜாயோ காவல் துறைக்கு வந்து புகார் கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சென்றுகொண்டிருக்கிறது.
டி.என்.ஏ டெஸ்ட் கேட்ட மாதம்பட்டி: மேலும் ஆண் குழந்தையும் பிறந்தது. புது உயிரின் ஜனனம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையிலும் அவர் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொண்டதாக பேசப்பட்டது. ஆனால் டி.என்.ஏ டெஸ்ட் கேட்டிருக்கும் ரங்கராஜ்; ஜாயுடனான திருமணம் தன்னை மிரட்டி செய்து வைக்கப்பட்டது என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

விடாத ஜாய் கிரிஸில்டா: டி.என்.ஏ டெஸ்ட் கேட்டதால் அங்கு சென்று பரிசோதனை செய்துகொண்டாவது இவ்விவகாரத்தை மாதம்பட்டியார் முடித்து வைப்பார் என்று பார்த்தால்; அவரோ சைலெண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். ஆனால் ஜாய் கிரிஸில்டா விடுவதாக இல்லை. நக்கல் செய்து போஸ்ட் போட்டார்; சாபம் விட்டு போஸ்ட் போட்டார்; கண்டா வர சொல்லுங்க என கர்ணன் பட பாடலோடும் போஸ்ட் போட்டுக்கொண்டே இருக்கிறார்.
முதல் மனைவியின் சப்போர்ட்: இத்தனை செய்தும் மாதம்பட்டியை அசைத்து பார்க்க முடியவில்லை. போதாக்குறைக்கு அவருடைய முதல் மனைவியும் தன்னுடைய முழு ஆதரவையும் அவருக்கு கொடுத்திருக்கிறார். அதேபோல் திரைத்துறையிலிருந்தும் அவருக்கு பக்கபலமாக சிலர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுநாள்வரை ஜாய்க்கு திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை.
மகனை சந்தித்த நடிகை: சொல்லப்போனால் அவருடன் பேசுவார்களா இல்லையா என்று சந்தேகம் கிளப்பும் அளவுக்கு நிலைமை இருந்தது. சூழல் இப்படி இருக்க பிரபல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஜாய் கிரிஸில்டாவின் மகனை நேரில் பார்த்திருக்கிறார். தனது மகனை அன்போடு ஸ்ருஷ்டி கொஞ்சும் புகைப்படத்தையும் ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். திரைத்துறையிலிருந்து ஜாய் கிரிஸில்டாவின் மகனை நேரில் பார்க்கும் முதல் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











