சனிக்கிழமை ராத்திரி கன்னக்குழி நடிகை செய்த வேலையை பார்த்தீங்களா?
சென்னை: நடிகை ஸ்ருஷ்டி டாங்கே செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. நரேனுடன் சேர்ந்து அவர் நடித்த கத்துக்குட்டி படம் மீண்டும் ரிலீஸாகியுள்ளது. கன்னக்குழி நடிகை என்று அழைக்கப்படும் அவரை பற்றி ஒரு கிசுகிசு பரவியதால் மார்க்கெட் பாதிக்கப்பட்டது.
அது குறித்து விளக்கம் அளித்த பிறகு வதந்தி அடங்கியுள்ளது.
ஸ்ருஷ்டி
ஸ்ருஷ்டி டாங்கே சனிக்கிழமை இரவு 2 மணிநேரத்தில் 30 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார். இதை புகைப்படங்களுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பெருமை
தான் சைக்கிளில் 30 கிலோமீட்டர் தூரம் சென்றபோது எடுத்த வீடியோவை ஸ்ருஷ்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வாழ்த்து
ஸ்ருஷ்டியின் சைக்கிள் பயணம் குறித்த ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
அனுபவம்
30 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றதை ஸ்ருஷ்டியாலேயே நம்ப முடியவில்லை.


Click it and Unblock the Notifications











