திருடும் போது பங்கமா மாட்டி… ஜெயிலுக்கு போன ஸ்ருதி… பிரியங்கா !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் பஞ்சதந்திர டாக்ஸ் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை. ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும்.

இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஜக்கி, மது, மற்றும் வருண் தலா ஒரு நாணயத்தை எடுத்தனர்.

பஞ்ச தந்திரம்

பஞ்ச தந்திரம்

யார் யார் நாணயத்தை திருடுனாங்க என்றே தெரியவில்லை. ஒருவர் நாணயத்தை திருடி மறைத்து வைக்க, மற்றவர்கள் அவர்களுக்கு தெரியாமல் நாணயத்தை திருடி சென்று விடுகிறார்கள் இதையடுத்து, ஹவுஸ்மெட்டுகள் அனைவரும் இரவு முழுவதும் தூங்காமல் நாணயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

மெஜரிட்டி வேண்டும்

மெஜரிட்டி வேண்டும்

கார்டன் ஏரியாவில் உள்ள நாணயத்தை சின்னப்பெண்ணு, ஐக்கி பெர்ரி மற்றும் இசைவாணி பாதுகாத்து வருகின்றனர். அப்போது அங்கு வரும் அபிஷேக் இப்படியே பார்த்துக்கிட்டே இருந்தால், அவ்வளவு தான், நான் இந்த நாணயத்தை எடுத்து சிறையில் இருக்கும் நிரூப்பிடம் கொடுத்து வைக்கிறேன் என்று கூறி நிரூப்பிடம் நாணயத்தை கொடுக்கிறார். அமைதியா இருங்க, மெஜரிட்டி நம்ப கையில் வரவேண்டும் என்று கூறி அங்கு இருந்தவர்களை குழப்புகிறார்.

ப்ளீஸ் நாணயத்தை தாங்க

ப்ளீஸ் நாணயத்தை தாங்க

அபிஷேக்கின் இந்த செயலால் கடுப்பான ஐக்கி நான் தொலைத்த நாணயத்தை நான் தேடிக்கொள்கிறேன் என்று அழுகிறார். எனக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம், நான் என் நாணயத்தை தேடிக்கொள்கிறேன் என்று அழுகிறார். இதையடுத்து, இசைவாணி , சிறையில் இருக்கும் நிரூப்பிடம் அபிஷேக் கொடுத்த நாணத்தை தருமாறு கேட்கிறார். நாங்க நேர்மையா விளையாடுரோம் நாணத்தை தாங்க என்கிறார்

வருண் பார்த்துவிடுகிறார்

வருண் பார்த்துவிடுகிறார்

ஆனால், நிரூப் அந்த நாணயத்தை தராமல் பிரியங்காவை கூப்பிடு என்றார். இதையடுத்து அங்கு வரும் பிரியங்காவிடம் நிரூப் நாணயத்தை கொடுக்கிறார். அவர் பிரியங்காவிடம் நாணயத்தை கொடுக்கும் போது வருண் பார்த்து பிக் பாஸிடம் கூறி விடுகிறார்.

ஸ்ருதி, பிரியங்கா சிறையில்

ஸ்ருதி, பிரியங்கா சிறையில்

இதையடுத்து, பிரியங்கா நிரூப்பிடம் நாணயத்தை வாங்கும் போது வருண் பார்த்த காரணத்தினாலும், ஸ்ருதி நாணயத்தை திரும்ப வைக்கும் போது போட்டியாளர்கள் பார்த்த காரணத்தினாலும் ஸ்ருதி மற்றும் பிரியங்கா இருவரும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X