'எங்க அப்பா அம்மா பிரிஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்'.. ஷாக் தரும் கமல் மகள் ஸ்ருதி!
தனது பெற்றோர் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் இருப்பார்கள் என்பதால் தான் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது பெற்றோர் விவாகரத்து செய்தது ஏன் என்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் நடிகை, பாடகி என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். நடிப்புக்கு சில காலம் இடைவெளிவிட்டிருந்த அவர், மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். டிரெட்ஸ்டோன் எனும் அமெரிக்க தொடரிலும் ஸ்ருதி நடித்து வருகிறார். தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில், ரவி தேஜாவுடன் ஸ்ருதி நடிக்கிறார்.

ஸ்ருதி பேட்டி
இந்நிலையில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றிற்கு ஸ்ருதி பேட்டி அளித்துள்ளார். அதில், தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். பெற்றோரை மீண்டும் சேர்த்து வைக்க விரும்பாதது ஏன் என்பது குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பா அம்மா
இதுகுறித்து ஸ்ருதி பேசும் போது, "என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.

வருத்தமான விஷயம்
ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.

நிம்மதி முக்கியம்
ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த விஷயமாகும்.

சேர்த்து வைக்க முயற்சிக்கவில்லை
அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகியது. என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை", என ஸ்ருதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











