ரகசிய திருமணம் செய்த சர்ச்சை நடிகை கர்ப்பம்

By Siva

பெங்களூர்: தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருபவர் பெங்களூரை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன். அவர் ராம் குமார் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

Sruthi Hariharan is pregnant

என்ன ஸ்ருதி திருமணமாகிவிட்டதா என்று யாராவது கேட்டால் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அவரது திருமண விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது.

நிபுணன் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் கிங் அர்ஜுன் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக ஸ்ருதி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பெங்களூர் காவல் நிலையம் ஒன்றில் அளித்த புகார் மனுவில் கணவரின் பெயர் ராம் குமார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகே அவருக்கு திருமணமானது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு திருமணம் பற்றிய கேள்விகளுக்கு உண்மையான பதில் அளித்தார். கடந்த 2 மாதங்களாக ஸ்ருதி ஹரிஹரனை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி வயிறு பெரிதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

ஸ்ருதி ஹரிஹரன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலரோ கர்ப்பமாக இருப்பதை இப்படி புகைப்படம் எடுத்து வெளியிடுவதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் கர்ப்பமானால் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக ஸ்ருதி தன் மீது தெரிவித்த பாலியல் புகார் பொய்யானது என்று கூறினார் அர்ஜுன். மேலும் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அர்ஜுன். கன்னட திரையுலகினரில் பெரும்பாலானோர் அர்ஜுனுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்ற பேச்சு கிளம்பியது.

அர்ஜுன் மீது புகார் தெரிவித்த பிறகு தனக்கு வரும் பட வாய்ப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X