குடும்பத்துடன் கொரோனா.. பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி!

By

ஐதராபாத்: இயக்குநர் ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி இருக்கிறது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்த உயிர்கொல்லி வைரஸ், ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியுள்ளது. உலகம் முழுவதுமே இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகை ரேகாவின் வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டனர். பிறகு தொற்று தீவிரமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்வீட் செய்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன், குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினர்.

இயக்குனர் ராஜமவுலி

இயக்குனர் ராஜமவுலி

நடிகர் விஷாலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார். இப்போது பிரபல பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும் சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம்.

பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தானம்

அதில் லேசான கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய உள்ளோம்' என்று கூறியுள்ளார். பண்ணை வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்கள், நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இரத்தம் ரணம் ரெளத்திரம்

இரத்தம் ரணம் ரெளத்திரம்

'பாகுபலி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராஜமவுலி. தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார். அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X