SSMB29: ஏழு கொண்டலவாடா! ராஜ மௌலியை நம்பி சம்பளம் கூட வாங்காமல் களமிறங்கிய மகேஷ் பாபு!என்ன நடக்குமோ?

ஹைதராபாத்: ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலேயே ஒரு காலம் வரை அதிக பணம் புழங்கிய சினிமா உலகமாக இருந்தது பாலிவுட் சினிமாதான். ஆனால் தொழில்நுட்பம் வளரவளர ஹிந்தி சினிமா ரசிகர்கள் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் படங்களைப் பார்த்து அவற்றைக் கொண்டாடுகின்றார்கள். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே, ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும், புரட்டிப்போட்டுக் கொண்டு இருக்கும் சினிமா உலகம் என்றால் அது, தெலுங்கு சினிமா உலகம் தான்.

இப்படியான சூழலை உருவாக்கியவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் பெரும் கவனத்தினை ஈர்க்க, இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதன் பின்னர் இவரது இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் பாக்ஸ் ஆபிஸில் செம ஹிட் அடித்தது. கடந்த ஆண்டில் வெளியான கல்கி 2898 கி.பி, புஷ்பா 2 ஆகிய படங்கள் இந்தி திரையுலகில் பிரமாண்ட வசூலைக் குவித்தது.

ss rajamouli mahesh babu ssmb 29

இப்படியான நிலையில் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படத்தின் பூஜை நேற்று அதாவது, ஜனவரி 2ஆம் தேதி போடப்பட்டது. SSMB29 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகள் மட்டும் சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. மேலும் இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 600 கோடிகள் என கூறப்படுகின்றது. மேலும் படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

SSMB29: இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெறவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகின்றது. படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைக்க இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

ss rajamouli mahesh babu ssmb 29

மகேஷ் பாபு சம்பளம்: இப்படியான நிலையில் படத்தினை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் நடிக்க மகேஷ் பாபு சம்பளமாக எதுவும் பேசவில்லை என கூறப்படுகின்றது. அதாவது, படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாவதாகவும் இந்த இரண்டு பாகங்களுக்குமே நடிக்க மகேஷ் பாபு சம்பளம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது இல்லாமல், படத்தின் வருவாயில் 20 சதவீதத்தை சம்பளத்திற்கு பதிலாக பெற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல் சினிமா உலகத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ss rajamouli mahesh babu ssmb 29

சம்பளமே இல்லை: இதுமட்டும் இல்லாமல், அதாவது எஸ்.எஸ். ராஜமௌலி தனது கடைசி படமான ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு சம்பளமாக ரூபாய் 200 கோடிகள் வரை பெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தப் படத்தினை இயக்க, சம்பளம் எதுவும் பேசாமல், வருவாயில் 20 சதவீதத்தை ஒப்பந்தமாக கேட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் படத்தின் வருவாயில் 40 சதவீதத்தினை இயக்குநர் மற்றும் நடிகருக்கு கொடுக்க ஸ்ரீ துர்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ராஜமௌலியை நம்பி, மகேஷ் பாபு சம்பளம் வாங்காமல் களமிறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

ss rajamouli mahesh babu ssmb 29

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X