Made in India - தாதா சாகேப் பால்கே பயோபிக்.. அறிவிப்பை வெளியிட்டார் ராஜமௌலி.. புது சம்பவம் காத்திருக்கு

மும்பை: Made in india (மேட் இன் இந்தியா) தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படும் அறிவிப்பை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்திருக்கிறார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் பாணி இந்திய சினிமாவில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையில் நடந்ததை திரையில் காட்சிகளாக பார்ப்பது நல்ல அனுபவம் என்பதால் ரசிகர்களும் அப்படிப்பட்ட படங்களுக்கு தங்களது பலத்த வரவேற்பை கொடுத்துவருகின்றனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகியிருக்கின்றன.

SS Rajamouli Announces Dada Saheb Phalke Biopic

மேட் இன் இந்தியா: இந்நிலையில் இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. இந்தப் படத்தை நிதின் கக்கர் இயக்க வருண் தயாரிக்கிறார். படத்துக்கு மேட் இன் இந்தியா (Made in Indiay) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ராஜமௌலி அறிவிப்பு: இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர்தான் இந்தப் படத்தை வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டிருக்கும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோது நான் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன்.

கற்பனை செய்வது சவால்: ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது ரொம்பவே கடினமானது. ஆனால் இந்திய சினிமாவின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை செய்து பார்ப்பது இன்னும் சவாலானது. அதற்கு நமது ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். இது பெருமைப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது கடினமானது, ஆனால் இந்திய சினிமாவின் தந்தையைப் பற்றி கற்பனை செய்வது இன்னும் சவாலானது. எங்கள் பையன்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள். மேட் இன் இந்தியாவை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.

தாதா சாகேப் பால்கே: இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகேப் பால்கே முதன்முதலாக முழு நீள திரைப்படத்தை எடுத்தவர். ராஜ ஹரிசந்திராதான் அந்தப் படம். 1913ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் நடிப்பதற்கு யாருமே முன்வரவில்லை. இதனையடுத்து தனது குடும்ப உறுப்பினர்களையே அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் அவர். அந்தப் படத்துக்கு பிறகு மோகினி பஸ்மஸுர், சத்யவான் சாவித்திரி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் 1974ஆம் ஆண்டு உயிரிழந்தார். திரைத்துறையில் இவர் பெயரில் வழங்கப்படும் விருது உச்ச விருதாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X