மாஸ்டர் படம் பற்றி ராஜமெளலி என்ன சொன்னாரு தெரியுமா? அனிருத்தை வெகுவாக பாராட்டிய RRR இயக்குநர்!

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்துக்கு இருக்கும் இமய மலை அளவு எதிர்பார்ப்புக்கு அந்த படம் நிச்சயம் தீனி போடும் என தைரியமாக பேட்டிகளிலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளிலும் பேசி வரும் இயக்குநர் ராஜமெளலி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் பற்றி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துள்ளது.

பாகுபலி 2ம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் சூறாவளி போல பெரிய வசூலை சுருட்டிக் கொண்டு சென்ற நிலையில், அடுத்ததாக ஆர்ஆர்ஆர் சுனாமி என்ன செய்யப் போகிறது என்பதை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆர்ஆர்ஆர் தமிழ் பதிப்புக்காக லைகா நிறுவனம் பிரத்யேகமாக ஏற்பாடு செய்த பேட்டியில் விஜே ரம்யா ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரிடம் கேட்ட சுவாரஸ்யமான பேட்டியில் இருந்து மாஸ்டர் படம் பற்றி ராஜமெளலி சொன்ன விஷயத்தை கிராப் செய்து விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய புரமோஷன்

பெரிய புரமோஷன்

இயக்குநர் ஷங்கருக்கு அடுத்து பெரிய அளவில் புரமோஷன் செய்து படங்களை ரிலீஸ் செய்யும் பாணியை ராஜமெளலி தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக செய்து வருகிறார். துபாயில் ப்ரீ ரிலீஸ் புரமோஷன், கர்நாடகாவில் முதலமைச்சரையே அழைத்து வந்து புரமோஷன் செய்த ராஜமெளலி கொல்கத்தா, வாரணாசி என ஏகப்பட்ட இடங்களுக்கு தனது இரு சிங்கங்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் பறந்து பறந்து புரமோஷன் செய்து வருகிறார்.

விஜே ரம்யா பேட்டி

விஜே ரம்யா பேட்டி

ஜனவரி 7ம் தேதி ஆர்ஆர்ஆர் வெளியாகும் என முன்னதாக அறிவித்து இருந்த நிலையில், விஜய் டிவியில் டிடி நீலகண்டன் தொகுத்து வழங்கிய பேட்டியில் கலந்து கொண்டது ஆர்.ஆர்.ஆர் டீம். ஆனால், ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், லைகா நிறுவனம் விஜே ரம்யாவை வைத்து பிரத்யேக பேட்டி ஒன்றை ஹைதராபாத்திற்கே சென்று படம்பிடித்தது. அந்த பேட்டியில் ராஜமெளலி பேசிய சுவாரஸ்யமான பேச்சு டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் புடிக்கும்

மாஸ்டர் புடிக்கும்

சமீப காலமாக வந்த படங்களிலேயே உங்களை கவர்ந்த படம் எது என விஜே ரம்யா கேள்வி கேட்க, ஆர்ஆர்ஆர் படத்தை ஆரம்பித்து 4 ஆண்டுகளாக எந்த படத்தையும் பார்க்க நேரம் கிடைக்கலையேம்மா என யோசித்துக் கொண்டிருந்த ராஜமெளலி சட்டென சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பார்த்தேன் சூப்பராக இருந்தது எனக் கூறியுள்ளார்.

அனிருத் வேறலெவல்

அனிருத் வேறலெவல்

மேலும், மாஸ்டர் படத்தில் அனிருத்தின் இசை வேற லெவலில் இருந்தது என்றும் பாராட்டித் தள்ளி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி. ஆர்ஆர்ஆர் படத்தின் நட்பு ஆந்தம் பாடலுக்கும் அனிருத் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் மற்றும் அனிருத்தை ராஜமெளலி பாராட்டி பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ராஜமெளலி இயக்கத்தில் விஜய்

ராஜமெளலி இயக்கத்தில் விஜய்

ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்த நடிகர் விஜய் ராஜமெளலி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என ராஜமெளலியின் லிஸ்ட்டில் டோலிவுட் நடிகர்கள் உள்ள நிலையில், விஜய் அந்த பட்டியலில் இணைந்தால் வேற லெவலில் இருக்கும் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X