1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தோட கதை இதுதானா?.. ராஜமெளலி கொடுத்த க்ளூ!
ஹைதராபாத்: வட இந்திய படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்றும் பாலிவுட் எல்லாம் தன்னை வைத்து படம் எடுக்க முடியாது என பேசிய மகேஷ் பாபு தற்போது வட இந்தியாவில் உள்ள வாரணாசி என்கிற ஊரின் பெயரையே கொண்ட படத்தில் நடித்து வருகிறார். அனுமான் பிடிக்காது, ராமரை பிடிக்காது என சொல்லி வந்த ராஜமெளலி அவர்களை வைத்து நல்லா கல்லா கட்டி வருகிறாரே என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
வாரணாசி படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் பொம்மை மாட்டின் மேல் மகேஷ் பாபு ஏறி அமர்ந்து வந்ததை பார்த்த பலரும் மாடும் பொம்மை, மாட்டின் மேல இருந்தவரும் பொம்மை என ஓவராக ஓட்டி வருகின்றனர்.

ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு த்ரேதா யுகத்தில் இருந்து 2027ம் ஆண்டு வரையிலான கதையை மகேஷ் பாபுவுக்காக ராஜமெளலி உருவாக்கிய நிலையில், க்ளிம்ப்ஸ் பார்த்தால் கூட மெயின் வில்லன் யாரு? என்ன கதை என ஒன்றுமே புரியவில்லையே, இதெல்லாம் வெறும் படத்தை பிசினஸ் செய்வதற்காக ராஜமெளலி காட்டியுள்ள வித்தை என்று சிலர் கூறி வந்தாலும், அந்த முதல் க்ளிம்ப்ஸிலேயே படத்தின் தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரையிலான காட்சிகளை ராஜமெளலி அடுக்கி வைத்துள்ளார் என்று தான் தோன்றுகிறது.
1200 கோடி பட்ஜெட்: ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து சுமார் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த வாரணாசி படத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பட்ஜெட் அதிகமாக 500 கோடி அளவுக்கே இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், டைம் டிராவல் படமாகவும் ராமாயண கதையை பின்புலமாகவும் கொண்டுள்ள படம் என்பதால் 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாக டோலிவுட் மீடியாக்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், பட்ஜெட் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
25 கோடி செலவு: வாரணாசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எந்திர மாடு மீது மகேஷ் பாபு அமர்ந்துக் கொண்டு விழாவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், அவருக்கான தனி லிப்ட் மேடையும் அமைக்கப்பட்டு ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக பேசினார். 100 அடி உயர எல்இடி ஸ்க்ரீனில் வாரணாசி பட டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் 25 கோடி செலவானதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் பாஸ் வாங்கிக் கொண்டு வந்தது, ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங் என வருமானமும் வந்திருக்கும் என்கின்றனர்.

வாரணாசி கதை என்ன?: ராஜமெளலி தனது க்ளிம்ப்ஸ் காட்சியில் படத்தின் கதையை பெரிதாக ரிவீல் செய்யவில்லை என்றே ரசிகர்கள் நினைத்தாலும், அவர் கதையின் மையக் கருவையும் வில்லனையும் அட்டகாசமாக அறிமுகப்படுத்தியுள்ளார் என்றே தெரிகிறது. ஏற்கனவே வில்லனுக்கு கும்பா என பெயர் வைத்திருந்ததை முதல் போஸ்டராக வெளியிட்டு அறிவித்தார். கும்பா என்றதும் பலரும் கும்பமேளா என நினைத்துக் கொண்டனர். ஆனால், க்ளிம்ப்ஸில் குறிப்பாக த்ரேதாயுகம் காட்சியின் போது ராமன் வானரப்படையின் மீது ஏறி நின்று பெரிய உருவத்தை அழிக்க அம்பு விடும் காட்சியில் ராமனுக்கு எதிரில் நிற்பது ராவணன் கிடையாது. அது கும்பகர்ணன் தான். வாரணாசி படத்தின் மெயின் வில்லனே கும்பகர்ணன் தான் அவனுடைய கனெக்ட்டிவிட்டி கதையாகவே த்ரேதாயுகம் போர்ஷன் காண்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பா vs ருத்ரா: இந்த காலத்தில் கும்பா உலகத்தை அழிக்க துடித்துக் கொண்டிருக்க, அதற்கு எதிராக ருத்ரா ஆடப்போகும் ருத்ர தாண்டவம் தான் இந்த வாரணாசி படத்தின் கதை என்பதையும் கிளைமேக்ஸ் காட்சியில் தான் மகேஷ் பாபு அந்த மாடு மீது சூலத்துடன் வில்லனை அழிக்க ஆக்ரோஷமாக போவார் என்பதையும் தெள்ளத் தெளிவாக ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரையிலான கதையின் போக்கையே முதல் க்ளிம்ப்ஸாக ராஜமெளலி கொடுத்துள்ளார் என்றே தெரிகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என ஒவ்வொன்றாக வெளியாக மேலும், படத்தின் கதை ரிவீல் ஆகும் என்றே எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











