twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுவரை தோல்வியே காணாத எஸ் எஸ் ராஜமெளலி... ஒரு பார்வை!

    By Shankar
    |

    கடந்த ஒரு வாரமாகவே சினிமாவைப் பற்றிய பேச்சு என நண்பர்கள் ஆரம்பித்தாலே அதில் பாகுபலி இல்லாமல் இருக்காது. அப்படி ஒரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது பாகுபலியின் இரண்டாம் பாகம். காரணம் முதல் பாகத்தின் இமாலய வெற்றி. இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. கதை எப்படியிருந்தாலும், கதைக்களமும், காட்சிப்படுத்துதலும் தொழில்நுட்பமும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திழுத்தது.

    இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து படத்தின் பட்ஜெட் 250 கோடி. ஆனால் பாகுபலி இரண்டாம் பாகம் மட்டுமே சுமார் 500 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாகுபலி இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் பட்சத்தில் பாகுபலியின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி எடுத்த சினிமாக்களைப் பற்றி ஒரு முறை பார்க்கலாம்.

    ஸ்டூடண்ட் நம்பர் 1 (Student No.1, 2001)

    ஸ்டூடண்ட் நம்பர் 1 (Student No.1, 2001)

    எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கா? அதேதான். சத்யராஜ் மகர் சிபிராஜ் திரையுலகில் கால்பதித்த முதல் திரைப்படம். அதன் தெலுங்கு வெர்ஷன் தான் இயக்குனராக எஸ்எஸ் ராஜமெளலியின் முதல் படம். ஜூனியர் என்டிஆர்-கஜாலா நடித்த இந்தப் படம் மெஹா ஹிட். அதன் தமிழ் வெர்ஷனுக்கு நேர்ந்த கதியை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியனும்னு இல்ல!

    சிம்மாத்ரி (Simhathri, 2003 )

    சிம்மாத்ரி (Simhathri, 2003 )

    என்ன இந்த பேரையும் எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? மன்மதன் படத்தில் சந்தானம் சொல்லுவாரே 'நேனே சிம்மாத்ரி.. நேனே சாம்பா.. தீஸ்கோரா' ன்னு.. அந்த சிம்மாத்ரி இதுதான். அதே ஜூனியர் என்டிஆரை வைத்து ராஜமெளலி இயக்கிய படம். அடுத்த சூப்பர் ஹிட். இந்தப் படத்தின் கதையை எழுதியது வேறு யாருமல்ல. ராஜமெளலியோட அப்பா விஜயேந்த்ர ப்ரசாத் தான்.

    சை (Sye):

    சை (Sye):

    நித்தின் - ஜெனிலியா நடித்த "சை" தான் ராஜமெளலியோட மூணாவது படம். இதுவும் சூப்பர் ஹிட்.

    சத்ரபதி ( Chartrapathi, 2005)

    சத்ரபதி ( Chartrapathi, 2005)

    நம்ம சுப்ரீம் ஸ்டார் நடிச்ச சத்ரபதி இல்லை. பாகுபலி ப்ரபாஸ் நடிச்ச சத்ரபதி. நம்ம 'குருவி' யோட கதை இந்தப் படத்துல inspire ஆகி எழுதப்பட்டது தான். ரொம்ப பிரபலமான 'வாடு போத்தே வீடு... வீடு போத்தே நேனு' ங்குற வசனம் இந்தப் படத்துலதான் வந்துச்சி. பாகுபலி சக்ஸஸுக்குப் பிறகு 'சந்திரமெளலி'ங்குற பேர்ல தமிழ்ல டப் செஞ்சு ரிலீஸ் பண்ணாங்க.

    விக்ரமார்குடு (Vikramarkudu, 2006)

    விக்ரமார்குடு (Vikramarkudu, 2006)

    விஜய் டிவில ஞாயித்து கிழமை ஆயிட்டா, போடுறதுக்கு எதுவும் ப்ரோகிராம் இல்லைன்னா, ஆப்ரேட்டருக்கு போர் அடிச்சான்னு பல சிட்சுவேஷன்கள்ல இந்தப் படம்தான் ஓடும். கெஸ் பன்னிருப்பீங்களே.. அதாங்க நம்ம சிறுத்தை. அதோட ஒரிஜினல் வெர்ஷன்தான் இந்த விக்ரமார்குடு. ரவிதேஜா-அனுஷ்காவ வச்சி ராஜமெளலி எடுத்த இந்தப் படம் தாறு மாறு ஹிட்.

    யமதொங்கா (Yamadonga , 2007)

    யமதொங்கா (Yamadonga , 2007)

    நம்ம அதியப் பிறவி மாதிரியான ஒரு கதைக்களம். இறந்து போகும் ஜூனியர் என்டிஆர் எமலோகத்துக்குப் போய், அங்கருக்க எமனையே ஆட்டிப்படைப்பது போல ஒரு கதை. செம ஹிட். சிலிண்டர் சைஸுல திரிஞ்சிகிட்டு இருந்த ஜூனியர் என்டிஆர் வெய்ட்ட பாதியா குறைச்ச படம்.

    மஹதீரா (Mahadheera, 2009)

    மஹதீரா (Mahadheera, 2009)

    லோக்கல் ஹிட்டுகள குடுத்துக்கிட்டு இருந்த ராஜமெளலி இந்திய அளவுல ஃபேமஸ் ஆனது இந்தப் படத்துலதான். சிரஞ்சீவி மகன் ராம்சரண்- காஜல் அகர்வால் நடிச்ச இந்தப் படம் மெஹா ஹிட். தமிழ்ல்ல மாவீரன்ங்குற பேர்ல டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆச்சு.

    மரியாத ராமண்ணா (Mariyatha Ramanna, 2010)

    மரியாத ராமண்ணா (Mariyatha Ramanna, 2010)

    மஹாதீரா படத்துல ஒரு சிறிய காமெடியன் வேடத்தில் நடிச்ச நகைச்சுவை நடிகர் சுனில்தான் இந்த மரியாத ராமண்ணாவோட ஹீரோ. மஹதீரா மிகப்பெரிய ஹிட் ஆனவுடனே, ஏன் ராஜமெளலி ஒரு காமெடி நடிகர வச்சி படம் எடுக்குறார்னு நிறைய பேர் ஆச்சர்யப்பட்டாங்க. காரணம் இருக்கு. மஹதீராவோட வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம்சரண்தான்னு சிரஞ்சீவி தரப்புல கொளுத்திப் போட்டுருக்காங்க. அது மட்டும் இல்லாம, பெரிய ஹீரோக்கள வச்சிதான் ராஜமெளலி இதுவரைக்கும் ஹிட் குடுத்துருக்காரு. அவரோட தொடர் வெற்றிக்கு பெரிய ஹீரோக்கள்தான் காரணம்னும் அரசல் புரசலா பேச ஆரம்பிக்க, கடுப்பான ராஜமெளலி எனக்கு பெரிய ஹீரோக்கள் முக்கியம் இல்லைன்னு காமெடியன் சுனில வச்சி படம் எடுத்து ஹிட் குடுத்தாரு. இந்த மரியாத ராமண்ணாதான் தமிழ்ல சந்தானம் நடிச்ச 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

    ஈகா/ நான் ஈ (Eega / Naan E, 2012)

    ஈகா/ நான் ஈ (Eega / Naan E, 2012)

    மேல சொன்ன அதே சம்பவம்தான் ஒரு 'ஈ'ய ஹீரோவா வச்சி படம் எடுக்க ராஜமெளலிய தூண்டியதுன்னும் சொல்லலாம். ராஜமெளலியின் முதல் இருமொழிப் படம். எப்படி பிச்சிக்கிட்டு ஓடுச்சின்னு எல்லாருக்குமே தெரியும்.

    பாகுபலி (Bahubali – The beginning, 2015)

    பாகுபலி (Bahubali – The beginning, 2015)

    'வெறும் ஐட்டங்காரனா இருந்தவர், பாகுபலி படத்துக்கப்புறம் அவர் ரேஞ்சே வேற சார்.. நம்மல்லாம் அவர தொடக்கூட முடியாது' என்று எல்லாரையும் சொல்ல வச்சிருச்ச படம். ஆல் ஏரியாவுலயும் கலெக்‌ஷன அள்ளுன படம் . பாகுபலியோட கதையும் அவரோட அப்பா விஜயேந்திர ப்ரசாத் எழுதுனதுதான்.

    அது மட்டும் இல்லாம ராஜமெளலியோட பெரும்பால படங்களுக்கு இசை அவருடைய 'ஒண்ணுவிட்டட அண்ணன் எம்எம் கீரவாணி (மரகத மணி).

    தொடர் வெற்றி வரிசையில் பாகுபலி -2 வும் மிகப்பெரிய வெற்றியடைய ராஜமெளலிய வாழ்த்துவோம்.

    - முத்துசிவா

    English summary
    Here is an over all view of SS Rajamouli's 11 earlier super hit movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X