Varanasi: பொங்கலுக்கு இல்லை.. இந்த தேதியில் தான் வாரணாசி ரிலீஸ்.. அடுத்த பொங்கல் தலைவர் பொங்கல் தான்!
சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட படமான வாரணாசி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியாகும் போது ராஜமெளலி பொங்கலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது மகேஷ் பாபு மற்றும் ராஜமெளலி இருவரும் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர்.
சென்சார் சான்றிதழ் வாங்காமல் ரிலீஸ் தேதியை படக்குழு எப்படி அறிவிக்கலாம் என ஜனநாயகன் விவகாரத்தில் தணிக்கை வாரியம் அடம்பிடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் துரந்தர், டாக்ஸிக், ராமாயணா மற்றும் வாரணாசி என ஏகப்பட்ட பெரிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் மோதாத ராஜமெளலி: 2027ம் ஆண்டு பொங்கலுக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் துவக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. டான் படத்தில் பிரியங்கா மோகன் நடித்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிப்பாரா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், கண்டிப்பாக சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற கதை மற்றும் நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து விடுவார் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தலைவர் பொங்கல் தான்.
வாரணாசி ரிலீஸ் தேதி: ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் ஏப்ரல் 7ம் தேதி 2027ம் ஆண்டு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜமெளலி, மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 1000 கோடிக்கு மேல் படத்தின் பட்ஜெட் என சொல்லப்படும் நிலையில், 2000 கோடி, 3000 கோடி வசூலை ராஜமெளலி டார்கெட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால் நட்சத்திரம்: வாரணாசி படத்தில் வால் நட்சத்திரம் ஒன்று வந்து விழுந்து உலகை அழிப்பது போன்ற காட்சியுடன் தற்போது ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல் பார்வையிலேயே வால் நட்சத்திரத்தை மையப்படுத்தி தான் இந்த கதையை ராஜமெளலி உருவாக்கியுள்ளார் என்பதை விளக்கும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications











