ஆலியா பட்டுக்கு அப்படியொரு ரோல்.. ஆர்.ஆர்.ஆர். பட சீக்ரெட்டை போட்டு உடைத்த ராஜமெளலி!
சென்னை: ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பட்டை தேர்வு செய்ய வேண்டியதன் காரணம் குறித்து இயக்குநர் ராஜமெளலி மனம் திறந்துள்ளார்.
Recommended Video
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்.
தமிழில் இந்த படத்திற்கு இரத்தம் ரணம் ரெளத்திரம் என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக ஆர்.ஆர்.ஆர் உருவாகி வருகிறது.

டபுள் ஹீரோ
டோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். அதே போல 2007ம் ஆண்டு ரிலீசான யமதொங்கா படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீர், நெருப்பு
சுதந்திர போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரணும், கொமரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இரத்தம் நெருப்பாக ராம் சரண், ரெளத்திரம் நீராக ஜூனியர் என்.டி.ஆர் என இரு நடிகர்களுக்கு சம பலத்தையும், இந்த இரண்டு எதிர் எதிர் சக்திகள் இணைந்து எப்படி ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது என்பது தான் இந்த படத்தின் கதை.

பாலிவுட் நடிகர்கள்
பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் தமிழில் இருந்து சமுத்திரகனி நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், சில பிரபல ஹாலிவுட் நடிகர்களும் பிரிட்டிஷ்காரர்களாக நடித்துள்ளனர்.

ஆலியா பட்
சமீபத்தில், ஆலியா பட் ராஜமெளலி படத்தில் இருந்து விலகியதாக வதந்திகள் பரவின. ஆனால், அதனை ஆலியா பட் மற்றும் படக்குழு மறுத்தது. ஆலியா பட்டை ஏன் இந்த படத்தில் தேர்வு செய்தேன் என இயக்குநர் ராஜமெளலி அவரது ரோல் குறித்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.

ஜோடி இல்லை
ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவருக்குமே ஆலியா பட் ஜோடி இல்லை என்ற மாஸ் அப்டேட்டை சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றிற்கு பேட்டியளித்த பாகுபலி இயக்குநர் ஓப்பன் செய்துள்ளார்.

நிகரான ரோல்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பெரும் ஹீரோக்களுக்கு இணையான ரோலில் நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். அப்பாவித் தனமும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு பெண் இந்த கதைக்கு தேவைப்பட்டதால், ஆலியா பட் சரியான தேர்வாக இருப்பார் என அவரை அணுகி, படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன் எனக் கூறினார்.

அசத்தல்
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், பாலிவுட்டில் இளம் புயலான ஆலியா பட் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் காத்தியாவதி, ரன்பீர் கபூர் உடன் பிரம்மாஸ்த்ரா மற்றும் ராஜமெளலி படம் என அசத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











