500 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படம்.. மகேஷ் பாபு படத்தை ஆரம்பிக்க நாள் குறித்த ராஜமெளலி!
சென்னை: ராஜமெளலி படத்தில் ஒரு ஹீரோ நடித்தால் அதன் பின்னர் அவர் உலகளவில் பிரபலமாகி விடுகிறார். அந்த அளவுக்கு தனது படத்தையும் தன் படத்தில் நடிக்கும் நாயகர்களையும் வேலை வாங்குவது மட்டுமின்றி ஊதியத்தை தாண்டிய புகழையும் வழங்கி வருகிறார் ராஜமெளலி.
பாகுபலி படங்கள் மூலம் பிரபாஸுக்கு கிடைத்த ரீச் மிகப்பெரியது. அதன் பிறகு நடித்தால் மினிமம் 200 கோடி பட்ஜெட் படம் என்றால் கதை சொல்ல வாங்க என்கிற ரேஞ்சுக்கு சென்று விட்டார்.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இன்று கோல்டன் குளோப் மேடை, கிரிட்டிக்ஸ் சாய்ஸ் மேடை என அலங்கரித்து வரும் நிலையில், விரைவில் ஆஸ்கர் மேடையிலும் பங்கேற்க உள்ளனர்.

ஆஸ்கர் வெல்லுமா நாட்டுக்கூத்து
முதல் முறையாக இந்திய பாடல் ஒன்று ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வாகி உள்ளதே மிகப்பெரிய சரித்திர சாதனையாக பார்க்கப்படுகிறது. கோல்டன் குளோப் விருதினை வென்றதை போல கீரவாணி இசையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ராஜமெளலி ஹீரோக்கள்
தெலுங்கு திரையுலகில் மாஸ் மசாலா படங்களில் நடித்து வந்த இளம் நடிகர்களை உலகளவில் பெருமைப்பட வைத்து வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸின் ரேஞ்சே மாறியது போலவே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரேஞ்சும் மாறி உள்ளது.

அடுத்தது மகேஷ் பாபு
ஏற்கனவே தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மகேஷ் பாபு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக ஜொலித்து வரும் நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் SSMB29 வது படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு சர்வதேச விருதுகளை வேட்டையாடும் வேலையில் பிசியாக உள்ள ராஜமெளலி இன்னமும் மகேஷ் பாபு படத்தை ஆரம்பிக்காத நிலையில், தற்போது எப்போது அவர் அதற்கான வேலையை தொடங்கப் போகிறார் என்கிற ஹாட்டான அப்டேட் வெளியாகி உள்ளது.

ஆஸ்கர் முடிந்ததும்
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் பிரிவில் 'நாட்டு நாட்டு' எனப்படும் நாட்டுக்கூத்து பாடல் இடம்பிடித்துள்ள நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆஸ்கர் விழாவுக்காக தான் அமைதி காத்து வருகிறாராம் ராஜமெளலி. தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ள ராஜமெளலி ஆஸ்கர் விருதை வென்று விட்டே வர வேண்டும் என்கிற முடிவில் உள்ளாராம்.

500 கோடி பட்ஜெட்டில்
ஆஸ்கர் விழா முடிந்ததும் தனது அப்பா விஜயேந்திர பிரசாத் உருவாக்கி உள்ள கதைக்கான வேலையை ஆரம்பிக்க போகிறார் ராஜமெளலி என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டு அடுத்த ஆண்டு சங்கராந்தியில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகேஷ் பாபு நடிக்க உள்ள இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாயாம். ஆப்பிரிக்கா காட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் சிலர் கடும் போட்டிப் போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ஆர்ஆர் படத்தை விட பெரிய அளவில் மகேஷ் பாபு படத்தை உருவாக்க ராஜமெளலி மாஸ்டர் பிளான் செய்து வருவதாக கூறுகின்றனர். SS Rajamouli plans big for Mahesh Babu movie and he start the project after Oscars


Click it and Unblock the Notifications











