twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 ஆயிரம் கோடி வசூல் பண்ணாம விட மாட்டார் போல.. ஜப்பான் மற்றும் சீனாவில் ரிலீசாகும் RRR!

    |

    சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட படைப்பான RRR திரைப்படம் இதுவரை ஆயிரம் கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    அதிகாரப்பூர்வமாகவே ஆயிரம் கோடி கடந்ததற்கு பெரிய விழாவையே இயக்குநர் ராஜமெளலி நடத்தி விட்டார்.

    இந்நிலையில், படத்தை அடுத்ததாக சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

    நடிக்கிறது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.. செல்வராகவன் நடிகராக மாறியது குறித்து பகிர்ந்துள்ளார்!நடிக்கிறது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.. செல்வராகவன் நடிகராக மாறியது குறித்து பகிர்ந்துள்ளார்!

    ஆயிரம் கோடி ஆர்ஆர்ஆர்

    ஆயிரம் கோடி ஆர்ஆர்ஆர்

    பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இந்திய மார்க்கெட்டையே உலகளவில் உயர்த்தியவர் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி முதல் பாகம் 650 கோடி வசூல் சாதனையை படைத்த நிலையில், இரண்டாம் பாகம் 1800 கோடி வரை வசூல் ஈட்டியது. இந்நிலையில், அவர் இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி வெற்றி நடை போட்டு வருகிறது.

    டாப்பில் தங்கல்

    டாப்பில் தங்கல்

    ஆனால், 2000 கோடி ரூபாய் வசூல் உடன் இந்தியளவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ஆமிர்கானின் தங்கல் திரைப்படம் தான். சீனாவில் அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. பாகுபலி படத்தை மிஞ்ச பாலிவுட்டில் யாருமே இல்லையா? என்கிற நிலை உருவான போது ஆமிர்கான் அந்த சாதனையை படைத்திருந்தார்.

    சீனா மற்றும் ஜப்பானில்

    சீனா மற்றும் ஜப்பானில்

    இந்நிலையில், RRR திரைப்படத்தையும் எப்படியாவது 2000 கோடி வசூல் செய்யும் படமாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் இயக்குநர் ராஜமெளலி தீவிரம் காட்டி வருகிறார். சீனா மற்றும் ஜப்பானில் விரைவில் RRR படத்தை டப் செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளாராம். இந்த முறை எதிர்பார்த்த வசூலை அடைய வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது என்கின்றனர்.

    2000 கோடி கன்ஃபார்ம்

    2000 கோடி கன்ஃபார்ம்

    சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி இதுவரை இந்திய சினிமா வெளியாகாத 36 நாடுகளை டார்கெட் செய்து அந்த நாட்டு மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் படத்தை டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் ராஜமெளலி. படத்திற்கு நல்ல வரவேற்பு மற்றும் வசூல் வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    மகேஷ் பாபு படம் எப்போ

    மகேஷ் பாபு படம் எப்போ

    மகேஷ் பாபு படத்திற்கான ஆயத்த பணிகளையும் ஒரு பக்கம் இயக்குநர் ராஜமெளலி ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிரிக்கா காட்டில் 500 கோடி பட்ஜெட்டில் அடுத்த பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் RRR படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    English summary
    SS Rajamouli plans to release RRR in China and Japan soon buzz circulates in Tollywood Industry. Director Rajamouli plans for a massive collection at Box Office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X