For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகேஷ் பாபு படத்தில் ஹாலிவுட் பிரபலங்களை களமிறக்க பிளான் போடும் ராஜமெளலி.. தோர் ஹீரோ நடிக்கிறாரா?

    |

    ஹைதராபாத்: பாகுபலி படத்தை பார்த்து விட்டே ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பிரபலங்கள் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்து இருந்தனர்.

    அதன் பிறகு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.

    பான் இந்தியா படங்களை இயக்கி 1000, 2000 கோடி மார்க்கெட்டை இந்தியாவில் ஆரம்பித்து வைத்த ராஜமெளலி அடுத்ததாக ஹாலிவுட் பிரபலங்களை மகேஷ் பாபு படத்தில் களமிறக்க திட்டமிட்டு வருவதாக ஸ்ட்ராங்கான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்யை மிஞ்சும் ராஜமௌலியின் அடுத்த படைப்பு..சாகசபடமா? கொல மாஸ் அப்டேட்!பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்யை மிஞ்சும் ராஜமௌலியின் அடுத்த படைப்பு..சாகசபடமா? கொல மாஸ் அப்டேட்!

    இந்தியாவின் பெருமை

    இந்தியாவின் பெருமை

    டோலிவுட் இயக்குநரான ராஜமெளலி பான் இந்தியா படங்களை இயக்கி இந்தியாவின் பெருமைக்குரிய இயக்குநராக மாறி உள்ளார். இந்தியாவின் தலை சிறந்த தற்போதைய இயக்குநர்கள் பட்டியலில் ரசிகர்கள் பலரும் ராஜமெளலிக்கே முதலிடத்தை தரும் அளவுக்கு ரசிகர்களின் பல்ஸ் அறிந்து பிரம்மாண்ட படங்களை உருவாக்கி வருகிறார்.

    சினிமா மார்க்கெட் விரிவு

    சினிமா மார்க்கெட் விரிவு

    இந்திய சினிமா மார்க்கெட்டை உலகளவில் விரிவுப்படுத்தி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து பல ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸை சாதித்துக் காட்டி உள்ளார். படத்தை எப்படி புரமோஷன் செய்வது, ரசிகர்களிடத்தில் படத்தை எப்படி கொண்டு செல்வது என ஏகப்பட்ட விஷயங்களை மற்ற இயக்குநர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

    மகேஷ் பாபு படம்

    மகேஷ் பாபு படம்

    இயக்குநர் த்ரிவிக்ரம் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி படத்தில் நடிக்க உள்ளார். ஆப்பிரிக்கா காட்டில் அட்வெஞ்சர் படமாக அந்த படம் உருவாகப் போவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ஆர்ஆர் படத்திலேயே வெள்ளைக்காரர்களாக நடிக்க சில ஹாலிவுட் நடிகர்களை இறக்கிய ராஜமெளலி மகேஷ் பாபுவின் படத்தை பான் வேர்ல்ட் படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சாமுவேல் ஜாக்சன்

    சாமுவேல் ஜாக்சன்

    பாகுபலி 2ம் பாகத்தை பார்த்து விட்டு பிரபல ஹாலிவுட் நடிகரான சாமுவேல் ஜாக்சன் ராஜமெளலி படத்தில் சின்ன ரோல் கொடுத்தால் கூட நான் நடிக்க ரெடி எனக் கூறியிருந்தார். இந்நிலையில், முதல் ஆளாக அவர் மகேஷ் பாபு படத்தில் இணையப் போவதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இன்னொரு மார்வெல் நடிகர் இணையப் போவதாக தற்போது அட்டகாசமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தோர் ஹீரோ

    தோர் ஹீரோ

    அவெஞ்சர்ஸ் படங்களில் தோர் கடவுளாக நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள அட்வெஞ்சர் படத்தில் நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் உலா வருகின்றன. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடாவுடன் இணைந்து எக்ஸ்ட்ராக்‌ஷன் எனும் படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆலியா பட் தான் ஹீரோயின்

    ஆலியா பட் தான் ஹீரோயின்

    ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட்டை சரியாக ராஜமெளலி பயன்படுத்தவில்லை என ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. இந்நிலையில் ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் ஆலியா பட்டுக்கு மிகப்பெரிய ரோல் காத்திருப்பதாகவும் அவர் தான் ஹீரோயின் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    English summary
    SS Rajamouli plans to rope Thor actor Chris Hemsworth plans for Mahesh Babu movie buzz trending in Tollywood Cinema Industry. Samuel Jackson and Alia Bhatt names are also circulated in casting list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X