திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்!

சென்னை: மோகன் லால், மீனா நடிப்பில் பிப்ரவரி 19ம் தேதி அமேசான் ப்ரைம்-ல் வெளியான படம் திரிஷ்யம் 2.

இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார், அணில் ஜான்சன் இசையமைத்திருந்தார். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருந்தார்.

சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல இயக்குனர் ராஜ மௌலி, படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியாகி மலையாளம் சினிமா துறையில் மட்டுமன்றி இந்திய சினிமாவில் பெரிதும் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து திரிஷ்யம் படத்தை பல மொழிகளில் மறுஆக்கம் செய்து வெளியிட, வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

எதிர்பாராத வகையில்

எதிர்பாராத வகையில்

பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் திரிஷ்யம் பாகம் இரண்டிற்கான பணிகள் தொடங்கி, அமேசான் ப்ரைம்-ல் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே கதையை இயக்குனர் கையாண்டிருந்தார். முதல் பாகத்தை போலவே இந்த படமும் பெரிய ஹிட் அடித்தது.

இரத்தம் ரணம் ரெளத்திரம்

இரத்தம் ரணம் ரெளத்திரம்

தெலுங்கு திரையுலகின் பிரபலம் இயக்குனர் ராஜமௌலி தற்போது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவரவுள்ள 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் திரிஷ்யம் 2ம் பாகத்தை பார்த்த ராஜமௌலி, ஜீத்து ஜோசப்பிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இறுக்கமான கதை சொல்லல்

இறுக்கமான கதை சொல்லல்

இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் அனைத்துமே மிகவும் அற்புதமாக இருந்ததாகவும், இறுக்கமான கதை சொல்லல், புத்திசாலித்தனத்திற்குக் குறைவில்லாமல் இருந்ததாகவும் பாராட்டியுள்ளார். இது போன்ற இன்னும் பல மாஸ்டர் பீஸ்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் எனவும் மெசேஜ்-ல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X