பிக் பாஸ் லாஸ்லியா பட பாடலை ரிலீஸ் செய்த இயக்குநர் ராஜமெளலி.. அவர் தான் காரணமா?

சென்னை: கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் 3வது சிங்கிளை இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்டேட் கேட்டு அலைந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா அப்டேட்டுகள் போதும்டா சாமி என்கிற ரேஞ்சுக்கு குவிந்து கொண்டே வருகிறது.

தர்ஷன், லாஸ்லியா நடித்துள்ள குகுள் குட்டப்பா படத்தின் "யாரோ யாரோ" பாடலை இயக்குநர் ராஜமெளலி வெளியிட என்ன காரணம் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

லாஸ்லியா படம்

லாஸ்லியா படம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடிப்பில் உருவாகி உள்ள படம் கூகுள் குட்டப்பா. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்லியா தொடர்ந்து பல படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார்.

கே.எஸ். ரவிக்குமார்

கே.எஸ். ரவிக்குமார்

ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படம் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். ரோபோவுக்கும் வயதான அப்பாவுக்கும் இடையே ஏற்படும் உறவு மற்றும் பிரிவு தான் இந்த படத்தின் கதை.

யாரோ யாரோ

யாரோ யாரோ

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 3வது பாடல் வெளியாகி உள்ளது. யாரோ யாரோ என தொடங்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோவில் ரோபோவுக்கும் கே.எஸ். ரவிக்குமாருக்கும் இடையேயான பந்தம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த பாடலை பாடியுள்ளார்.

ராஜமெளலி ரிலீஸ்

ராஜமெளலி ரிலீஸ்

ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் 1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கும் இயக்குநர் ராஜமெளலி திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கூகுள் குட்டப்பா படத்தின் யாரோ யாரோ பாடலை ரிலீஸ் செய்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவர் காரணமா

அவர் காரணமா

இயக்குநர் ராஜமெளலி இந்த பாடலை வெளியிட இந்த பாடலை எழுதியுள்ள மதன் கார்க்கி தான் காரணம் என தகவல்கள் பரவி வருகின்றன. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் தமிழ் வெர்ஷனுக்கு வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியவர் மதன் கார்க்கி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இயக்குநர் ராஜமெளலி இந்த பாடலை வெளியிட்டுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X